Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ராகு சூரிய சேர்க்கை முடிவு: இனிமேல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியும்...
Rahu Sun Conjunction Ends In Pisces: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழும். அதில் சில கிரக சேர்க்கைகள் பல ஆண்டுகளுகக்கு பின் நிகழும். அந்த வகையில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு.
இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதேப் போல் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இதனால் மீன ராசியில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்தது. இந்த சேர்க்கையின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் ராகு சூரிய சேர்க்கை முடிவடைந்தது. ராகு சூரிய சேர்க்கை முடிவால் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல வெற்றிகளையும் பெறவுள்ளார்கள். இப்போது ராகு சூரிய சேர்க்கை முடிவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
ராகு சூரிய சேர்க்கை முடிவால் மீன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலர் புதிய உறவுகளை உருவாக்கலாம். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
கடகம்
ராகு சூரிய சேர்க்கை முடியாமல் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி ரீதியாக, பண வரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறலாம். முக்கியமாக மாணவர்களுக்கு இனிமேல் நன்றாக இருக்கும். நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு சூரிய சேர்க்கையானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வளர்ச்சியையும், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபராக இருந்தால், புதிய ஒப்பந்தத்தால் மிகப்பெரிய லாபத்தைப் பெறலாம். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தால், இனிமேல் நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications