Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழ்ந்துள்ள ராகு புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
Rahu Mercury Conjunction In Pisces 2024: வேத ஜோதிடத்தில், நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். கிரகங்களின் இளவசரன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் ஏப்ரல் 09 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் ராகு, புதன் சேர்ககை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு ராகு, புதன் சேர்க்கையானது மீன ராசியில் நிகழ்ந்தது. இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கிடைக்காமல் தள்ளிப் போன பதவி உயர்வு இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். மாமியார் மாமனாரிடம் இருந்து பண உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications