Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ராகு புதன் சேர்க்கையால் இந்த 4 ராசிக்காரங்க நிறைய சிரமங்களை சந்திப்பாங்களாம்.. உங்க ராசி என்ன?
Rahu Mercury Conjunction In Aries 2023: கிரகங்களின் இளவரசனான புதன் 2023 மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷம் செவ்வாய் ஆளும் ராசி. மேலும் செவ்வாயும், புதனும் எதிரெதிர் கிரகங்களாக கருதப்படுகின்றன. அதோடு ஏற்கனவே மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். மேஷ ராசியில் ராகு பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இந்நிலையில் புதனும் மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளதால், மேஷ ராசியில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் நிதி ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இப்போது மேஷ ராசியில் நிகழ்ந்துள்ள ராகு புதன் சேர்க்கையால் அதிக சிரமத்தை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்பவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அவசரப் பட்டு எந்த வேலையை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் அதிக வேலை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். முக்கியமாக இந்த காலத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை காலமானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கக்கூடும். குடும்ப சூழல் குழப்பம் நிறைந்து இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications