Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மேஷ ராசியில் ராகு புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Rahu Mercury Conjunction In Aries 2023: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். இந்த கிரக சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைந்தார்.
இதனால் மேஷ ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளன. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராகு புதன் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இந்த காலத்தில் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் அமையும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இக்காலத்தில் நற்பலனைப் பெறுவார்கள். முக்கியமாக நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் காதல் உறவு சிறப்பாக இருக்கும். நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். உயர் கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏழரை சனியில் இருந்து விடுபட்டிருப்பதால், உங்களின் விருப்பங்கள் அனைத்தும் இனிமேல் நிறைவேறும். உங்களின் திட்டங்களும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கத்தை விட இக்காலத்தில் அதிக பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை இல்லாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications