Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ராகு கேது பெயர்ச்சியால் அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Rahu Ketu Transit 2023: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன.
அந்த வகையில் ராகு, கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்களாகும். என்ன தான் நிழல் கிரகங்களாக இருந்தாலும், இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் நிச்சயம் தெரியும். அதில் சிலருக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

ராகு, கேது நிழல் கிரகங்கள் மட்டுமின்றி, எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை ராசியை மாற்ற 18 மாதங்கள் ஆகும். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு, கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. அதில் ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றனர்.
இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானுக்கும், கேதுவுக்கும் நட்புறவு உள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கன்னி
2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். குறிப்பாக வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பின் ஒரு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றத்தைத் தரும். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், அதில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பங்குச் சந்தையில் சில நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications