Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ராகு கேது பெயர்ச்சியால் அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Rahu Ketu Transit 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அடிக்கடி தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றுவதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படுகின்றன.
அந்த வகையில் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் 18 மாதங்கள் கழித்து ராசியை மாற்றுகின்றன. அதுவும் இந்த ராகு கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் செல்கிறார்.

ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் வக்ர நிலையில் தான் எப்போதும் பயணிக்கும். அதுவும் அக்டோபர் 30 ஆம் தேதி நிகழவுள்ள ராகு கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் நீங்கி, திடீர் செல்வ செழிப்பு ஏற்படும் மற்றும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இப்போது ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இதுவரை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பின், இந்த ராசிக்காரர்களின் மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, இருவருக்குமான உறவு வலுபெறும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தொடர்பான விஷங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மகரம்
ராகு கேது பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.. வழக்கத்தை விட தைரியம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இப்பெயர்ச்சிக்கு பின் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். வீட்டின் சௌரியங்கள் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சிக்கு பின் நல்ல காலம் தொடங்குகிறது என்றே கூறலாம். இதுவரை இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரச்சனை நிறைந்து இருந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செல்வ நிலையில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை பெறலாம். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புக்களைப் பெறலாம். மொத்தத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications