Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ராகு கேது பெயர்ச்சியால் அக்டோபர் 30 முதல் அடுத்த ஒரு வருடம் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Rahu Ketu Transit 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் நிலைகளைக் கொண்டு தான் ஒருவரது எதிர்காலம் குறித்து கணித்து கூறப்படுகின்றன. எனவே கிரகங்களின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களிலேயே ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நிழல் கிரகங்களாகும். இந்த கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதேப் போல் கேது துலாம் ராசிக்குள் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மற்றும் கேது கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றனர்.

இப்படி ராகு கேது பெயர்ச்சியாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் பண இழப்பு, ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் பலவிதமான பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்கவுள்ளனர். இப்போது 2023-ல் நிகழும் ராகு கேது பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
ராகு கேது பெயர்ச்சியின் போது, ராகு மீன ராசிக்குள் நுழைவதால், இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு வருடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ராகு முதல் வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிறு விஷயங்களுக்கும் அதிகமாக கோபப்படுவார்கள். இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதேப் போல் முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
ராகு கேது பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு தீங்கை விளைவிக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சம்பாதித்த பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மிகப்பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிடும்.
கேதுவின் நிலையால் ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்படக்கூடும். ஏற்கனவே உங்களை பாடுபடுத்திய நோய் மீண்டும் இந்த பெயர்ச்சிக்கு பின் வரலாம். யாருக்கும் இக்காலத்தில் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்காது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியானது பலவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வரும். முக்கியமாக அடிக்கடி ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மிகுந்த மனச்சோர்வால் பாதிக்கப்படலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகன் அதிகரிக்கும்.
குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிது. வியாபாரம் செய்பவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சிக்கு பின் சற்று மந்தமாகவே இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications