Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ராகு கேது பெயர்ச்சியால் அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Rahu Ketu Transit 2023: நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள். ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதால் இந்த கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுவும் இந்த கிரகங்கள் இரண்டும் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். இப்படிப்பட்ட ராகு கேதுவின் பெயர்ச்சி தீபாவளிக்கு முன் நிகழவுள்ளது. அதுவும் இந்த ராகு கேது பெயர்ச்சி 2023 அக்டோபர் 30 ஆம் தேதி நிகழவுள்ளது.

அப்போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் செல்கின்றனர். இதனால் இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது தீபாவளிக்கு முன் நிகழும் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகுவும், 6 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கின்றனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. குடும்ப வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிந்திக்கும் திறன் மேம்படும்.
நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும், நிறைய சேமிக்க முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அக்டோபர் 30 முதல் மிகவும் அற்புதமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகுவும், 4 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கின்றனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு அக்டோபர் 30 முதல் திறக்கப் போகிறது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் இந்த பெயர்ச்சிக்கு பின் தேடி வரும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பணிபுரிபவர்களுக்கு தங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் முதலீடு செய்வதாக இருந்தால், ஒன்றிற்கு இரண்டு முறை சிந்தித்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகுவும், 2 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கின்றனர். இதனால் இதுவரை வாழ்க்கையில் கஷ்டத்தை சந்தித்து வந்தால், அக்டோபர் 30 முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications