Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Rahu Ketu Nakshatra Transit 2023: நவகிரகங்களில் ராகு, கேது போன்றவை நிழல் கிரகங்களாகும் மற்றும் இவ்விரு கிரகங்களும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். ஜோதிடத்தில் இவ்விரு கிரகங்களும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
ராகு, கேது ஆகிய இரண்டு நிழல் கிரகங்களும் ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும். இந்த கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது ராகு, கேது கிரகங்கள் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணித்து வருகின்றன. இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி கேது சித்திரை நட்சத்திற்கு மாறியுள்ளார். அதே சமயம் ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
இவ்விரு நிழல் கிரகங்களின் நட்சத்திர மாற்றமானது, அனைத்து ராசிகளிலுமே நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். இப்போது ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு, கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு, கேதுவின் நட்சத்திர மாற்றமானது வாழ்வில் சந்தோஷத்தையும், நல்ல பண ஆதாயத்தையும் தரும். குடும்ப சூழல் சாதகமாக இருக்கும் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு, கேது நட்சத்திர மாற்றமானது சில சிரமங்களை சந்திக்க வைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும். குழந்தைகளால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். மாணவர்கள் இக்காலத்தில் சில சவால்களை சந்திக்கக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் தாக்கம் அதிகம் இருக்காது. அவர்களின் வாழ்க்கை சாதாரணமாகவே இருக்கும். இருப்பினும் பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு கேது நட்சத்திர மாற்றத்தினால் குடும்பத்தில் சில பிரச்சனைகளைக் கொண்டு வரும். நிதி நிலையில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது மற்றும் பணத்தை செலவழிக்கும் போது புத்திசாலித்தனமாக செலவிட அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ராகு, கேது நட்சத்திர பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும். பணப் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமான மாற்றங்களைக் காணலாம். திருமணமானவர்கள் மற்றும் காதலிப்பவர்கள் தங்களின் உறவில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ராகு கேது நட்சத்திர மாற்றத்தால் சவால்களை சந்திக்க நேரிடும். மேலும் பணம் பிரச்சனைகள் மற்றும் பண கவலைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை உறவுகளில் பிரச்சனை இருந்தால், இனி இது நீங்கி, உறவு மேம்படும. தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால், தங்களின் தனிப்பட்ட வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் நிதி நிலைமை எவ்வித மாற்றமுமின்றி சீராக இருக்கும். இருப்பினும் செலவுகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது நட்சத்திர மாற்றமானது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகு, கேது நட்சத்திர பெயர்ச்சியானது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். திருமணமானவர்களின் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மேலும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











