Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
ராகு குரு சேர்க்கை முடிவால் அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Rahu Jupiter Conjunction Ends On October 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கத்தால் சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரக சேர்க்கைகள் நிகழ்வதுண்டு. அப்படி நிகழும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு.
அந்த வகையில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு பகவான் ஒன்றாக பயணித்து வருகின்றனர். மேஷ ராசியில் உருவாகியுள்ள ராகு மற்றும் குருவின் சேர்க்கையாது அக்டோபர் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

ஏனெனில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கு செல்கிறார். குரு, ராகு சேர்க்கை முடிவுக்கு வருவதால், சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது குரு ராகு சேர்க்கை முடிவுக்கு வருவதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
குரு-ராகு சேர்க்கை முடிவுக்கு வருவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆரோக்கியம் மேம்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தங்கம் விற்பவர்களுக்கு அக்டோபர் முதல் எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் ராகுவுடன் இணைந்து உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 30 முதல் ராகு பெயர்ச்சி நிகழ்வதால், சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது. இந்த ராசிக்காரர்களின் தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை அக்டோபர் 30 முதல் சிறப்பாக இருக்கப் போகிறது. ஏனெனில் ராகு குரு சேர்க்கை முடிவுக்கு வருகிறது. இதனால் திடீர் பண வரவைப் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications