Latest Updates
-
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ராகுவின் அருளால் 2024-ல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Rahu In Pisces 2024: நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும். முக்கியமாக ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார்.
இப்படிப்பட்ட ராகு 2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த மீன ராசியில் தான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார். கிரகங்களில் ராகு ராசியை மாற்ற நீண்ட காலம் எடுப்பதால், ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது, ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மீன ராசியில் ராகு பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ராகு நல்ல பலன்களை அளிப்பார். அதுவும் கும்ப ராசியின் அதிபதியான சனியும், ராகுவும் நண்பர்கள் என்பதால், ராகு இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை அளிப்பார். பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு ராகுவின் அருளால் நல்ல வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தால், அந்த வேலை கிடைக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது ராகுவின் அருளால், நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். எதிரிகளை இந்த ஆண்டில் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபராக இருந்தால், இந்த ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். மேலும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு 2024 ஆம் ஆண்டு நல்ல பலன்களைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது ராகுவின் அருளால் சாதகமாக இருக்கும். அதுவும் ராகு வருமானம் மற்றும் லாபத்தைத் தரும வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய பணத்தை சம்பாதித்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications