Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீன ராசியில் இருக்கும் ராகு: 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் நிறைய சேரப்போகுது..
New Year 2024: இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2024 ஆம் ஆண்டில் சில முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றப் போவதில்லை. இப்படி ராசியை மாற்றாமல் ஆண்டு முழுவதும் ஒரே ராசியை பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதிய ஆண்டு சிறப்பாக இருக்கப் போகிறது.
அதுவும் நிழல் கிரகமான ராகு பகவான் ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணிக்கவுள்ளார். மேலும் ராகுவின் 7-வது அம்சம் கன்னியில் உள்ள கேது மீது விழுகிறது. அதோடு மீன ராசியில் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவான் 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படியான நிலையில் 2024 ஆம் ஆண்டில் ராகு பகவான் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயங்களையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் தரவுள்ளார். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ராகுவின் அருளால் சிறப்பாக இருக்கப் போகிறது. முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். இந்த ஆண்டில் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த ஆண்டில் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். முக்கியமாக தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை இந்த ஆண்டில் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ராகுவின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ராகுவின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வணிகத்தைத் தொடங்கலாம். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல பண ஆதாயத்தையும் தரம்.
அதோடு புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த ஆண்டில் போடப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications