Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
மீன ராசியில் இருக்கும் ராகு: 2025 ஆம் ஆண்டு வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Rahu In Pisces: வேத ஜோதிடத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன. அதில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரு நிழல் கிரகங்களாகும். இவை இரண்டிற்கும் சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் இவை இரண்டுமே பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். அதோடு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் தான் ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்தது. இப்பெயர்ச்சியின் போது ராகு மேஷ ராசியில் இருந்து விலகி, குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். மீன ராசியில் நுழைந்த ராகு அந்த ராசியில் 2025 வரை இருப்பார்.

ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராகு பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இதுவரை மன அழுத்தத்தில் இருந்திருந்தால், இனிமேல் இந்த ராசிக்காரர்கள் நல்ல மன அமைதியைப் பெறுவார்கள். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
ஒன்றிற்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து நல்ல பண ஆதாயத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். மொத்தத்தில் 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். தடைபட்ட பல முக்கியமான வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கூட்டு தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். மகர ராசியின் அதிபதி சனி. இந்த சனிக்கு ராகு நண்பன் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தைரியம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுபெறும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு இக்காலகட்டத்தில் கிடைக்கும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் தொழிலில் முன்னேற்றத்திற்கான சில சிறப்பான பலன்களைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இனிமேல் நல்ல வேலை கிடைக்கும். மொத்தத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications