Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ராகுவால் அடுத்த 2 மாசம் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பண பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
Rahu In Aries 2023: வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும். ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் நிலை சரியாக இல்லாவிட்டால், அது அந்நபரின் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
அந்த வகையில் ராகு 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2023 அக்டோபர் மாதத்தின் இறுதி வரை ராகு மேஷ ராசியில் பயணித்து, பின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேஷ ராசியில் ராகு இன்னும் இரண்டு மாதங்கள் பயணிக்கவுள்ள நிலையில், சில ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய வேலையை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் இரண்டு மாதங்கள் போராட வேண்டியிருக்கும். ஆனால் வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். இதனால் அக்டோபர் வரை துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் சில நஷ்டத்தையும், பிரச்சனைகளையும் சந்திக்கலாம். மேலும் திருமணமானவர்களின் வாழ்க்கையும் சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை செய்தால், அதில் வெற்றி எதுவும் கிடைக்காது.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு பயணிக்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வீடு அல்லது சொத்துக்களை இக்காலத்தில் வாங்க முயற்சித்தால், ஏமாற்றமடையக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











