For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022-ல் இந்த 5 ராசிக்காரங்க பெரிய பண நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பிருக்காம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 2022 இலாபகரமான ஆண்டாகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாகவும் இருந்தாலும் தனிப்பட்ட பலன்களை பார்க்கும் போது சில ராசிக்காரர்கள் வரப்போகிற ஆண்டில் சில இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

|

2022 ஆம் ஆண்டு வரப்போகிறது, அனைவரும் தங்கள் ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பு ஏற்கனவே வந்துவிட்டது, இதில் பலரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Zodiac Signs Who Will Have the Worst 2022 in Tamil

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 2022 இலாபகரமான ஆண்டாகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாகவும் இருந்தாலும் தனிப்பட்ட பலன்களை பார்க்கும் போது சில ராசிக்காரர்கள் வரப்போகிற ஆண்டில் சில இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பண விஷயத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அவர்கள் மிகப்பெரிய நஷ்டங்களை சந்திக்க நேரிடும். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2022 ஆம் ஆண்டு உங்களுக்கு முக்கியமானது. இந்த வருடம் பாவ கிரகமான ராகு உங்கள் ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார். குழப்பம் மற்றும் தடைகளுக்கு ராகு காரணமாகவும் கருதப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்யும்போது கவனமாக இருங்கள். பெரிய முதலீடு அல்லது பெரிய மூலதனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். நிபுணர்களின் அறிவு மற்றும் ஆலோசனையின்றி எந்த வேலையையும் செய்யாதீர்கள். இழப்பு ஏற்படலாம். பணத்தை மிச்சப்படுத்துங்கள், தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள்.

கடகம்

கடகம்

புத்தாண்டில் பணம் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களைத் தொந்தரவு செய்யாத வகையில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு தெரியாத பயத்தால், நீங்கள் முடிவுகளை எடுக்கலாம். இதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். டெபாசிட் மூலதனம் குறையலாம். தவறான மற்றும் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வருமானத்திற்கு அதிகமாக பணம் செலவு செய்வது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து செலவு செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

2022 ஆம் ஆண்டு உங்களுக்கு முக்கியமானது. இந்த ஆண்டு முன்னேற வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த ஆண்டு உங்கள் வெற்றியைத் தடுக்க எதிரிகளும் போட்டியாளர்களும் செயல்படலாம். கவனமுடன் இருக்கவும், அலட்சியத்தால் பண இழப்பு ஏற்படலாம். சர்ச்சை மற்றும் டென்ஷனில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை முக்கியமான பணிகளில் உதவிகரமாக இருக்கும். நீங்களாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பெரும்பாலும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.

மகரம்

மகரம்

2022-ம் ஆண்டு சனியின் ராசி மாறப்போகிறது. அதனால்தான் உங்களுக்கும் புத்தாண்டு முக்கியமானது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி இந்த ஆண்டு பண விஷயத்தில் சில பிரச்சனைகளை கொடுக்கலாம். கடன் வாங்கி கொடுக்கும் சூழ்நிலையை தவிர்க்கவும். தவறான செயல்களில் இருந்து பணம் சம்பாதிக்க முயற்சிக்காதீர்கள்.

கும்பம்

கும்பம்

2022 உங்களுக்கு நிதிரீதியாக பலனளிக்கக் கூடிய ஆண்டாக இருக்கப்போவதில்லை. உங்களின் நிதி விவகாரங்கள் கலவையான முடிவுகளோடு இருக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் நஷ்டம் உங்களை நோக்கி வர அதிக வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க அனைத்து அர்த்தமற்ற செலவுகளையும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். நஷ்டத்தைத் தவிர்க்க ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உங்கள் செலவுகளை திட்டமிட்டுக் குறைக்க முயற்சிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Will Have the Worst 2022 in Tamil

Here is the list of zodiac signs who will have a financial loss in 2022.
Desktop Bottom Promotion