Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
2022-ல் இந்த 7 ராசிக்காரங்களோட நிதி நிலைமை அட்டகாசமா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், சிலர் சிறந்த எதிர்காலத்தைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது 2022-இல் கிரக மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும் என்பதைக் காண்போம்.
2021 ஆம் ஆண்டு நமக்கு எப்படி இருந்தாலும், வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டை நாம் அனைவருமே சிறப்பாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்போம். குறிப்பாக நிதி நிலைமை நன்றாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவோம். ஒவ்வொரு நாளும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால், ஒருவரது நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்க வேண்டியது மிக முக்கியமாக உள்ளது.

இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பலரது தொழிலில் இடையூறு ஏற்பட்ட நிலையில், சிலர் தங்களின் நிதியை மீட்டெடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆயினும் 2022 ஆம் ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், சிலர் சிறந்த எதிர்காலத்தைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது 2022-இல் கிரக மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும் என்பதைக் காண்போம்.

சிம்மம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஆண்டின் தொடக்கத்தில் 5 ஆவது வீட்டில் உள்ளார். ஆகவே 2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் நீண்ட காலமாக வணிகம் மற்றும் வேலையில் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவார்கள். இந்த வருடத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலையைக் கூட மாற்ற வாய்ப்புள்ளது. நிதி நிலையைப் பொறுத்தவரை, ஜனவரி முதல் மார்ச் வரையில் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் 2022 இல் ராகு மேஷ ராசியில் நுழைவதால், சில நிதி இடையூறுகளை சந்திக்க நேரிடும். பிப்ரவரி மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அதிகப்படியான வேலையின் காரணமாக ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கலாம்.

கன்னி
2022 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பு என்றால் அது இவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் மற்றும் மாணவர்கள் நல்ல ஆதாயங்களையும் பெறுவார்கள். மார்ச் 2022 இல் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சனி ஒன்றாக இருப்பதால், பணியிடத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை வாய்ப்புகளை எதிர்ப்பார்ப்பவராக இருந்தால், இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். 2022 இல் புதன் துலாம் ராசிக்கு செல்லும் போது, காதல் வாழ்க்கை மேம்படும் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் 2022 இல் கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு அவசர முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். 2022 இல் உங்களின் திறன் மற்றும் குறைபாடுகளை அறிந்து செயல்பட்டால், நல்ல நிதி நிலைமையை அடைவீர்கள். இந்த ஆண்டில் நீங்கள் தகுதியற்றவர் என்று மற்றவர்கள் உணரும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

தனுசு
2022 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நிதியைப் பொறுத்தவரை சாதகமான காலம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால், வருமானத்தில் சாதகமான மாற்றத்தை எதிர்பார்க்கலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் 2022 மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்கு பின் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் வேலைக்கு முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் ஆரோக்கிய பிரச்சனையால் நிதி நிலையில் இடையூறுகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுங்கள். பருவ கால மாற்றங்களின் போது கவனமாக இருங்கள். ஆண்டின் பிற்பகுதியில் பங்கு சந்தை போன்ற புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் நடுப்பகுதி வரை நிதியைப் பொறுத்தவரை சராசரியாக இருக்கும். இருப்பினும், ஏப்ரல் 2022-க்கு பின் குரு மீன ராசிக்கு செல்வதால், நிதி நிலை மேம்படும். மேலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ராகுவின் நிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் இந்த ஆண்டில் புதிய தொழில் தொடங்கலாம். அதோடு ஆண்டின் முதல் காலாண்டிற்கு பின் வேலை மாற்றத்திற்கான சரியான நேரமாகும். சிறப்பான நிதி ஆதாயத்தைப் பெற நினைத்தால், கடினமாக உழைக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

கும்பம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் சாதகமான நிலையில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். 2022 மார்ச் மாதத்தில் செவ்வாய், சக்கிரன், புதன் மற்றும் சனி இணைந்திருப்பதால், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இருப்பிகும், ராகு பெயர்ச்சியால், சிலர் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும், வேலைகள் மற்றும் வணிகத்தில் சில சோதனைகளை சந்திப்பீர்கள். ஆயினும் உங்களின் செயல்திறனின் அடிப்படையில் நிதி வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிதி நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நீண்ட கால முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்
2022 இல் ரிஷப ராசிக்காரர்களின் வியாபாரம் மற்றும் வேலை மாற்றத்திற்கான சிறந்த ஆண்டாக இருக்கும். 2022 ஆம் ஆண்டில் தற்போது சம்பாதிப்பதை விட சிறப்பாக சம்பாதிக்க உங்களின் தனிப்பட்ட திறன்கள் உதவும். பணிபுரிபவர்கள், ஆண்டின் முதல் பாதியில் சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதிகமாக செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். சிறந்த ஆதாயங்களைப் பெற உங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனால் நிதி நிலைமை மேம்படும். முக்கியமாக இந்த ஆண்டில் வேலை-வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியம். ஏனெனில் வெறும் பணத்தை சம்பாதித்தால் மட்டும் வாழ்க்கை சிறப்பாக இருந்துவிடாது. எனவே எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும்.

கடகம்
2022 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களும் நல்ல நிதி நிலைமை மற்றும் அதிர்ஷ்டத்தால் பயனடைவார்கள். கிரக மாற்றங்களால், ஆண்டின் தொடக்கம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். பின் ஏப்ரல் மாதத்திற்கு பின் பலர் தங்களின் வேலையை மாற்ற நினைக்கலாம். இக்காலத்தில் பயணம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. 2022 ஆம் ஆண்டு பெரும்பாலானோருக்கு திருப்திகரமான ஆண்டாக இருக்கும்.



Click it and Unblock the Notifications