Just In
- 3 min ago
உங்க பிறந்த தேதி 9,18 மற்றும் 27 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- 50 min ago
இருமல் & வலி உட்பட இந்த சாதாரண அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க...ஏன்னா இது புற்றுநோயோட அறிகுறியாம்!
- 1 hr ago
கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- 2 hrs ago
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
Don't Miss
- Movies
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!
- News
இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்
- Technology
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
- Automobiles
இந்த விலை உயர்ந்த பரிசை ஊழியர்கள் ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க! இங்க வேலை கிடைச்சா வாழ்க்கை எங்கயோ போயிரும்!
- Sports
ஆர்சிபியின் ரகசியத்தை அறிந்த ஆஸி.. போலி அஸ்வினுக்கும் அழைப்பு.. பெங்களூரு பயிற்சிக்கு காரணம் இதுதான்
- Finance
சப்பாத்தி சுடும் பில் கேட்ஸ்..! அட அட பார்க்கவே கலக்கலா இருக்கே..!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023-ல் இந்த 7 ராசிக்காரங்களுக்கு புதிய நல்ல வேலை கிடைக்கபோகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022 முடியும் தருவாயில் உலகம் முழுக்க இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள். மிகப்பெரிய கம்பெனிகள் கூட தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்த சூழல் வேறு பணியில் இருப்பவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, வரப்போகிற புது வருடம் பல மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் 2023-ல் தற்போது இருக்கும் வேலையை விட சிறப்பான வேலையை பெறப்போகிறார்கள். 2023 ஜோதிட கணிப்புகளின் படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
2023-ல் ரிஷப ராசிக்காரர்களை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. மார்ச் மாதம் சனி மற்றும் மே 17 முதல் வியாழனால் ஊக்கப்படுத்தப்பட்ட யுரேனஸால் தூண்டப்படும் கிரக மாற்றமும் உங்கள் தைரியமும் உங்கள் ஆர்வமும் இணைந்து உங்களை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்லப்போகிறது. 2023 இல் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் 2023-ல் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவார்கள். ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உங்களின் பொன்னான நேரம் தொடங்கப் போகிறது. யுரேனஸும் சனியும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து உங்களை வெற்றியடையச் செய்யும் வேலையை செய்யப்போகிறார்கள், மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து வியாழன் உங்களுக்கான வாய்ப்புகள் தேடிவரும், கண்களைத் திறந்து வைத்து காத்திருங்கள்.

சிம்மம்
2023-ல் சிம்ம ராசிக்காரர்கள் உச்சத்தை அடையப்போகிறார்கள். மார்ச் 7 முதல் எதிரிகள், போட்டி, தடைகள் விலகும். நீங்கள் மேலும் வளர்ச்சியடையலாம். மே மாதத்தின் நடுப்பகுதி வரை, குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

கன்னி
2023 கன்னி ராசிக்காரர்களுக்கு கனவு நிறைவேறும் ஆண்டாக இருக்கப்போகிறது. மார்ச் 7ல் மீனத்தில் உள்ள சனி ஒரு தொழில்முறை உறுதிப்பாட்டைச் செய்ய உங்களுக்கு உதவும். யுரேனஸ் ஒரு புதிய ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உங்களை ஊக்குவிக்கிறது, மேலும் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து வியாழன் உங்கள் தொழில்முறை வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

விருச்சிகம்
புதிய வேலையில் இணைய இந்த ஆண்டு தயாராக இருங்கள். மார்ச் 7ல் மீன ராசியிலும், ஏப்ரலில் செவ்வாய் கடக ராசியிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு புதிய வாழ்வைத் தரும். நீங்கள் வாய்ப்புகளை உங்களை நோக்கி ஈர்க்கிறீர்கள், மாற்றம் உங்களைத் தூண்டுகிறது. மே 17 முதல் ரிஷபத்தில் உள்ள வியாழன் உங்களுக்கு ஒரு புதிய சிறந்த வேலையைக் கொண்டு வரலாம்.

மகரம்
மார்ச் 7 முதல் மீனத்தில் உள்ள சனி உங்கள் லட்சியங்களை அதிகரிக்கிறது, மேலும் ஒப்பந்தங்களை ஊக்குவிக்கிறது. யுரேனஸ் ஆண்டு முழுவதும் உங்களுக்கு உதவும், குறிப்பாக மே நடுப்பகுதியில் இருந்து ரிஷபத்தில் இருக்கும் வியாழன் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை வழங்கும். உங்கள் துணிச்சல் உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கிறது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2023-ல் அவர்களின் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கப்போகிறது. உங்களின் கடின உழைப்பு இந்த வருடம் வீணாகாது. மார்ச் முதல் உங்கள் ராசியில் உள்ள சனி உங்கள் ஆராய்ச்சியை ஒழுங்கமைக்கவும், கவனம் செலுத்தவும் மற்றும் இலக்கு வைக்கவும் உதவுகிறது. இந்த ஆண்டு உங்கள் முயற்சிக்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். உங்களுக்கு பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்யுங்கள்.