Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
இந்த 6 ராசிக்காரங்க 2022-ல் அவங்களோட உண்மையான காதலை அடையப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2021 கிட்டத்தட்ட முடியப்போகிறது, வரப்போகிற புது ஆண்டு அனைவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. காலம் மாறும்போது நம் வாழ்க்கையும் மாறும்.
2021 கிட்டத்தட்ட முடியப்போகிறது, வரப்போகிற புது ஆண்டு அனைவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. காலம் மாறும்போது நம் வாழ்க்கையும் மாறும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் காதல்தான் ஒருவரின் வாழ்க்கையில் எல்லையில்லா ஆனந்தத்தை வழங்கக்கூடியது.

புதிய ஆண்டில் காதல் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் வரப்போகிறது. அது எந்த வகையான மாற்றங்கள் என்பது அவரவர் ராசியைப் பொறுத்தது. 2022 ஜோதிட கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் தங்கள் உண்மையானக் காதலை சந்திக்க வாய்ப்புள்ளது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2022-ல் உண்மையான காதல் கிடைக்க வாய்ப்புள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
சிங்கிளாக இருப்பவர்கள் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்த ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கும், புதிய அர்ப்பணிப்பு மற்றும் உண்மையுள்ள உறவைத் தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளது. இவர்கள் தங்கள் துணையுடன் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் மற்றும் அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் தருணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் தங்கள் உறவை ஆமையின் வேகத்தைப் போல மெதுவான இயக்கத்தில் எடுத்துக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமான பிணைப்பு பாராட்டத்தக்கதாக இருக்கும். இவர்களின் உறவு திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது.

கடகம்
இவர்களின் காதல் வாழ்க்கை 2022 ஆம் ஆண்டில் அவர்களின் ஆத்ம துணையை சந்திக்கும் நோக்கம் கொண்டது. சந்திரனால் ஆளப்படும் அதிக உணர்திறன் கொண்ட இவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் வழக்கத்தை விட உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களின் ஒன்பதாவது வீட்டின் அதிபதியான தர்மர் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பிறகு உண்மையான காதல் அவர்களின் வாழ்க்கையில் நுழைய வழிவகுப்பார். அவர்கள் ஆளுமையுடன் அவர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு வலுவானதாக இருக்கும், மேலும் அவர்களின் மனம் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுடன் நிரம்பியிருக்கும்.

கன்னி
இவர்களுக்கு இந்த வருடம் காதலில் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் பழைய நண்பரிடமோ அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாகவோ தங்கள் வாழ்க்கையின் காதலைக் காணலாம். முதல் பார்வையிலேயே காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் ஏழாவது வீட்டின் அதிபதி நீண்ட கால நட்பின் வீட்டில் இருப்பதால், ஏப்ரல், 2022க்குப் பிறகான நேரம் இவர்களின் காதலை வெளிப்படுத்துவதற்கான சரியான நேரமாகும். ஏழாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் இந்த இணைப்பு அவர்களுக்கு நீண்ட கால மற்றும் நிலையான உறவை ஆசீர்வதிக்கும். அவர்களின் காதலனுக்கான அவர்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் ஆண்டின் இறுதியில் அதிகரிக்கும்.

விருச்சிகம்
இவர்கள் அதிக பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள். காதல் உறவுகளில் இந்த எண்ணம் அவர்களை கொஞ்சம் கடினமான நபராக ஆக்குகின்றன. ஏப்ரல் 2022 இன் நடுப்பகுதியில் இருந்து, அவர்கள் தங்கள் காதல் வீட்டில் வலுவான குருவின் ஆசிகளைப் பெறுவார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் நிலையான தொடர்பைக் கொண்டுவரும். மேலும், அவர்களின் லக்னத்தில் குருவின் அம்சம் அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முதிர்ச்சியையும் வலிமையையும் தரும். காதல் பந்தத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவில் தீவிரமாக இருப்பார்கள் மற்றும் குடும்பத்திற்கு தங்கள் காதலியை அறிமுகப்படுத்துவார்கள்.

தனுசு
காதல் ஜாதகத்தின்படி, தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 வெற்றிகரமாக இருக்கும். இவர்களின் ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆண்டின் தொடக்கத்தில் உதய ராசியில் இருப்பார். உறவில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் துணையிடம் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். சிங்கிளாக இருப்பவர்கள் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காதல் மீது ஆர்வத்தைக் கொண்டிருப்பார்கள், இது எதிர் பாலினத்தவர்களிடையே கவர்ச்சியாகவும் பிரபலமாகவும் இருக்கும்.

மீனம்
உறவுகளில் இருப்பவர்கள், தங்கள் பந்தத்தில் ஒரு புதிய அழகைக் காண்பார்கள். அவர்கள் தங்கள் பிணைப்பில் மகிழ்ச்சியின் புதிய பரிமாணத்தைக் கண்டுபிடிப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் பிணைப்பின் வலிமை வளரும் மற்றும் அவர்கள் தங்கள் உறவில் அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்குவார்கள். இவர்களின் உறவு திருமணத்தில் முடிய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.



Click it and Unblock the Notifications
