Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
2023-ல் இந்த 5 ராசிக்காரங்க தொழிலாளியா இருந்து முதலாளியா மாறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புத்தாண்டு அருகில் வந்து விட்டது, அனைவரும் புது ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். 2023-ல் நிதி முன்னணியில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும்
புத்தாண்டு அருகில் வந்து விட்டது, அனைவரும் புது ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். 2023-ல் நிதி முன்னணியில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மேஷம், மிதுனம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசியினருக்கு இந்த ஆண்டு பொருளாதாரக் கண்ணோட்டம் மிகவும் செழிப்பாக இருக்கும், அதே சமயம் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கிரக நிலைகளின் சாதகமான விளைவுகளால் 2023-ல் சில ராசிக்காரர்கள் தொழிலாளியாக இருந்து முதலாளியாக மாறப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் 2023-ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்கப் போகிறார்கள். ஒரு புதிய வாழ்க்கைக்கான மாற்றம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். சில சொத்துக்களை விற்பதன் மூலம் புதிய வியாபாரத்தை தொடங்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் பெரிய இலாபத்தை அடைய வாய்ப்புள்ளது. சூரிய பகவானை வழிபடுவது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 ஒரு அற்புத ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் வேலையில் புதிய மாற்றத்தை அடைந்து திடீர் வளர்ச்சியைப் பெறலாம், சிலர் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால் உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் அனைத்திலும் வெற்றிதான்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2023-ல் சவால்களை எதிர்கொள்ளும் போது சிறப்பாகச் செயல்படுவார்கள். குடும்பம் மற்றும் நட்பில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிப்பார்கள். உங்களின் நீண்ட கால வியாபாரத் திட்டம் இந்த வருடம் நிறைவேற வாய்ப்புள்ளது . குழந்தைப் பேறு குறித்த சில நல்ல செய்திகளுக்காகக் காத்திருப்பவர்களின் ஆசைகள் நிறைவேறலாம். நீங்கள் வெளிநாட்டில் குடியேறலாம் அல்லது வெளிநாட்டில் வேலை பெறலாம்.

தனுசு
புதிய தொழில் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நிதி நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும். சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். இந்த ஆண்டு பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் உங்களின் முடிவுகளிலும் நீங்கள் கவனமாக இருந்தால் வெற்றிகரமான முதலாளியாக வருவீர்கள்.

கும்பம்
கும்ப ரசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பர்பெக்ட்டான ஆண்டாக இருக்கும். வங்கிக்கடன் மூலம் உங்களின் வியாபார ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது. பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் நிறைய வெற்றிகள் இருக்கும். மனஉறுதி உங்களை வெற்றிகரமான முதலாளியாக மாற்றும். சிவபெருமானை தவறாமல் வழிபடுங்கள்.



Click it and Unblock the Notifications
