Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்க உங்க கூட வேலை செய்றவங்களா இருந்தா ஜாக்கிரதையா இருங்க... ரொம்ப மோசமானவங்க இவங்க!
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட தங்கள் அலுவலகம் அல்லது பணியிடத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள்.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட தங்கள் அலுவலகம் அல்லது பணியிடத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். பணியிடம் மோசமாக இருக்கும் போது அது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும். அலுவலகம் சிறப்பான இடமாக மாறுவது உடன் பணிசெய்பவர்களை பொறுத்தே அமைகிறது.

சிலர் பிறவியிலேயே இரக்கமுள்ளவர்களாகவும், தங்கள் சக ஊழியர்களுக்கு உதவுவதில் பெருமிதத்தையும் நிறைவையும் கொண்டுள்ளனர். இருப்பினும், சிலர் இதற்கு முற்றிலும் எதிர்மறையான குணங்களை கொண்டிருக்கிறார்கள். இந்த நபர்கள் தங்கள் சக ஊழியர்களின் அறிவாற்றலை பயன்படுத்துகிறார்கள் ஆனால் அதற்கான பாராட்டை அவர்களுக்கு தர மாட்டார்கள். இத்தகைய தந்திரமான மற்றும் சுயநல நபர்களுடன், வேலை செய்வது மிகவும் சவாலானதாக இருக்கும், மேலும் அவர்களின் சுய-மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் சக பணியாளர்களை பெருமளவில் பாதிக்கும். சில ராசிக்காரர்கள் மோசமான சக பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடன் பணிபுரிந்தால் அவர்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தேவையற்ற நாடகத்தை விரும்பாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பணியிடத்தில் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், மேலும் அவர்கள் உங்களை எதிர்க்க ஒரு பழிவாங்க திட்டமிடுவார்கள். ஒருவர் அவர்களின் ஈகோவை ஒருமுறை காயப்படுத்தினால், அவர்கள் சந்திக்கப்போகும் கசப்பான பயணத்திலிருந்து யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாததால், அவர்களின் கோபம் பொதுவாக ஒரு சிறிய பிரச்சினைக்குக் கூட வெடித்து சிதறுகிறது. மகர ராசிக்காரர்களின் ஆணவமான நடத்தை பழிவாங்குவதற்கும், பணியிடத்தில் சக நண்பர்களின் உருவத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதையும் செய்யும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்களின் தவறுகளை ஒருவர் சுட்டிக் காட்டினால், அவர்களை மோசமாகத் துன்புறுத்துவார்கள். தவறான வார்தைகளைப் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் பணிச்சுமையை அதிகரிப்பது வரை, அவர்கள் வேலைகளை பாதிக்கும் அனைத்து செயல்களையும் செய்வார்கள். பழிவாங்குவதற்காக அவர்கள் தங்கள் சக ஊழியர்களை அனைத்து விதத்திலும் துன்புறுத்துவார்கள்.

சிம்மம்
அதிக கோபம் கொண்ட, சிம்ம ராசிக்காரர்கள் ஒரு சில நொடிகளிலேயே கிளர்ச்சியடைவார்கள், இது அவர்களை முரட்டுத்தனமான சக ஊழியராக ஆக்குகிறது. அவர்களின் ஈகோசென்ட்ரிக் போக்கு அவர்களை மனக்கிளர்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது, அதன் விளைவாக வேலை செய்யும் போது அவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் ஆத்திரம் தூண்டப்பட்டவுடன், இந்த ராசிக்காரர்கள் தங்கள் கசப்பை நீண்ட காலத்திற்கு மனதிற்குள்ளேயே வைத்திருக்கலாம் மற்றும் உங்களை காயப்படுத்த சரியான தருணத்திற்காக காத்திருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மோசமான வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் உங்களுக்கு தீவிர வடுவை ஏற்படுத்தலாம்.

விருச்சிகம்
மற்ற ராசிகளை விட உடன் வேலை செய்வதற்கு மிகவும் கடினமான ராசியென்றால் அது விருச்சிக்கம்தான். விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமானவர்கள் மற்றும் இரகசியமானவர்கள், அவர்கள் கோபமடையும் போது கட்டுப்படுத்த முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தலாம். அவர்கள் தங்கள் சக ஊழியர்களின் வளர்ச்சியை பார்த்து மிகவும் பொறாமைப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து வெளிச்சத்தைப் பறிக்க மோசமான தந்திரங்களைச் செயல்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications