Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்!
இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...
சிலர் எப்பொழுதும் பிறரின் அறிவுரையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள், அறிவுரையை ஆர்வமாக கேட்பார்கள். ஆனால் அவற்றை எப்போதும் பின்பற்ற மாட்டார்கள். இதை அவர்கள் வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள்.
அறிவுரை கேட்பது என்பது அனைவரும் வெறுக்கும் ஒரு விஷயமாகும். அதேசமயம் அறிவுரைகள் ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகும். ஆனால் சிலர் எப்பொழுதும் பிறரின் அறிவுரையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள், அறிவுரையை ஆர்வமாக கேட்பார்கள். ஆனால் அவற்றை எப்போதும் பின்பற்ற மாட்டார்கள். இதை அவர்கள் வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள்.

நாம் அவர்களின் பிரச்சினைகளை தன்னுடைய பிரச்சினைகளாக நினைத்து அதற்கான தீர்வுகளை சிந்தித்து அவர்களுக்கு கூறுவோம். ஆனால் அவர்கள் அதனை பின்பற்றாமல் நம்மை அவமதிப்பார்கள். நம்முடைய புத்திசாலித்தனமான அறிவுரைகளும், யோசனைகளும் புறக்கணிக்கப்படும்போது அது நமக்கு கோபத்தை உண்டாக்கும். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள அவர்களின் பிறந்த ராசி கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உங்களின் அறிவுரைகளை மதிக்கமாட்டார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களிடம் நீங்கள் அறிவுரை கேட்கும்போது அவர்கள் நீங்கள் அதனை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், ஆனால் அவர்கள் இதை பின்பற்றமாட்டார்கள். தனுசு ராசிக்காரர்கள் பிரச்சினைகளை ஆராயும்போதும், அதனை பற்ற விவாதிக்கும்போதும் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்பார்கள். ஆனால் அதனை செயல்படுத்தும்போது அதில் இருந்து தவறிவிடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கள் மீதிருக்கும் நம்பிக்கையாகும். மற்றவர்கள் எவ்வளவு அறிவுரைகள் கூறுகிறார்கள் என்பதை பற்றி இவர்க்ளுக்கு கவலை இல்லை. இறுதி முடிவு இவர்கள் சுயமாக எடுப்பதாகத்தான் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களை மதிப்பார்கள், நேசிக்கவும் செய்வார்கள். ஆனால் அவர்களுக்குள் மற்றவர் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை பற்றிய கவலையே இல்லாமல் இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிவிட மாட்டார்கள், இது அவர்களின் அறிவுரை கேட்கும் தன்மையை மேலும் குறைக்கும். இவர்களுக்கு தங்களுக்கு தேவையான சரியான அறிவுரையை யாராவது கூறுவார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுது இருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாரும் அவ்வாறு வழங்குவதில்லை.

ரிஷபம்
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் ஆலோசனை கேட்கும்போது, யாராவது அவர்களுடன் உடன்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மற்றவர்களின் கருத்துகளையும், யோசனைகளையும் பெறுவது மிகச் சிறந்தது என்று இவர்கள் நன்கு அறிவார்கள், ஆனால் அவர்களுக்கு சிறந்த ஆலோசனையை வழங்க அவர்கள் நம்புபவது அவர்களை மட்டும்தான். தான் எதை செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் கூறுவது இவர்களுக்கு நகைப்புக்கு உரியதாகும். ஒரு முடிவை இவர்கள் எடுத்துவிட்டால் அதற்குபின் இவர்களை வேறொரு விஷயத்திற்கு சம்மதிக்க வைப்பது நடக்காத காரியமாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் அறிவுரை கேட்பது அவர்கள் எடுத்த முடிவை பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பதற்காக மட்டும்தான். தன்னைத் தவிர தனக்கு ஏற்றது எது என்பதை யாராலும் கூற முடியாது என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களின் நலனுக்காக அறிவுரை கூறுவதை அவர்கள் பாராட்டுவார்கள். ஆனால் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் உங்களின் வார்த்தைகளை அவர்கள் செயல்படுத்த மாட்டார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் கேட்கும் ஒவ்வொரு அறிவுரைக்குப் பின்னாலும் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். ஆனால் முடிவெடுக்கும்போது அவர்கள் இதயம் சொல்வதைத்தான் கேட்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் உள்ளுணர்வு கூறுவதை கவனிப்பவர்களாக இருப்பவர்கள், அதேசமயம் இவர்கள் மிகவும் இறக்கமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். எனவே ஒருவர் அறிவுரை கூறும்போது அதனை நிராகரித்து அவர்களை புண்படுத்துவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் அறிவுரை கூறும்போது அதனை கவனிப்பதும் போலவும் அதனை செயல்படுத்துவது போலவும் பேசுவார்கள் ஆனால் இறுதியில் தாங்கள் நினைத்ததை செய்துவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications