Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நண்பர்களாக இருப்பார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையாவே இருங்க...!
நட்பு என்பது பரஸ்பர அன்பு மற்றும் பரஸ்பர உதவிகளைக் கொண்ட இருவழிப்பாதை என்று அனைவரும் நம்புகிறார்கள்.
நட்பு என்பது பரஸ்பர அன்பு மற்றும் பரஸ்பர உதவிகளைக் கொண்ட இருவழிப்பாதை என்று அனைவரும் நம்புகிறார்கள். இருப்பினும், எல்லா நட்புகளுக்கும் இது பொருந்தாது, ஏனென்றால் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பும் சில ராசி அறிகுறிகள் உள்ளன, அதேபோல தனது நண்பர்களை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பும் ராசிக்காரர்கள் உள்ளனர்.

அவர்கள் பெறுவதைப் போல அவர்கள் ஒருபோதும் தங்கள் நண்பர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள், அவர்கள் யார் என்பதை ஏற்றுக்கொள்வதை விட மற்ற நபரை எப்போதும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம், அவர்களுடனான உங்கள் நட்பு நச்சுத்தன்மை வாய்ந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்
உங்கள் சிறந்த நண்பர் மீன ராசிக்காரர் என்றால், அவர்கள் தங்கள் நோக்கங்களை உங்களுக்கு உண்மையாக வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் அவர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளை விட தங்கள் சாதனைகள் மீது கவனம் செலுத்துவதை நீங்கள் காணலாம். இவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் காதலரை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள், இவர்களுக்கு உண்மையான நண்பர்களை விட தங்கள் பேச்சை கேட்டு நடக்கும் அடிமைகளே தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுடன் நண்பர்களாக இருப்பது மிகவும் கடினமாகும், ஏனெனில் இவர்கள் அனைத்திலும் தங்கள் நண்பர்களை கட்டுப்படுத்த விரும்புவார்கள். தங்கள் நண்பர்களின் உணவு விஷயங்களில் கூட இவர்கள் தலையிடுவார்கள். அவர்களின் விருப்பங்களுக்கு மாற்றாக நண்பர்கள் நடக்கும் போது அவர்களை மோசமாக விமர்சிப்பார்கள். ஆனால் அவர்களின் மோசமான நடத்தை உங்களை எரிச்சலூட்டும் போது அவர்க்ளின் நடத்தையை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்து அடிக்கடி உதவியை எதிர்பார்ப்பார்கள், ஆனால் அதையும் ஈகோவுடனேயே கேட்பார்கள். இவர்கள் தங்களை ஒரு தார்மீக உயர்நிலையில் இருப்பதாகக் கருதுகிறார்கள், அதனால்தான் இவர்கள் உயர்ந்தவர்களாக உணர்கிறார்கள் மற்றும் தங்கள் நண்பரின் முடிவுகளை கடுமையாக மதிப்பிடுகிறார்கள். இவர்கள் தங்கள் நண்பர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள், மேலும் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்வுகள் அல்லது நடத்தைகளைச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுடன் மேலோட்டமான நட்பை வைத்திருந்தால் சிறந்த நண்பர்களாக இருக்கலாம். இருப்பினும், இவர்களது நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலோர் இவர்களுடன் சகித்துக் கொண்டே நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் நண்பர்களிடம் முதலாளி போல நடந்து கொள்வார்கள், அதாவது அவர்களின் நண்பர்கள் இவர்கள் நண்பர் விரும்பும் அனைத்தையும் செய்யத் தூண்டப்படுவார்கள், ஆனால் மற்றவர்கள் தங்கள் விருப்பப்படி வேடிக்கையான செயல்களை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அவர்களும், அவர்களின் விருப்பங்களுமே முக்கியம். இவர்கள் எவ்வளவு சுயநலமானவர்கள் என்பதை இவர்கள் மட்டுமே அறிவார்கள், அதற்காக இவர்கள் வருந்தவும் மாட்டார்கள். இதனாலேயே இவர்களின் நட்பு வட்டம் மிகவும் சிறியதாகவே இருக்கும், மேலும் நண்பராக இருப்பவர்களும் மிகவும் வேறு வழியில்லாமலேயே இவர்களுடன் பழகுவார்கள். தங்களின் விருப்பப்படிதான் தங்களின் நண்பர்களும் நடக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.



Click it and Unblock the Notifications