Latest Updates
-
அட்சய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால் ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் -
பொடுகு தொல்லைக்கு குட்-பை சொல்லும் நேச்சுரல் ஹேர் பேக்கை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
பாண்டிச்சேரி ஏன் சுதந்திரமடைந்து 16 ஆண்டுக்குப் பின் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது தெரியுமா? -
காலையில் இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் மோசமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
கொங்குநாடு தக்காளி சட்னி - 10 நிமிடத்தில் டக்குன்னு எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
18 ஆண்டுக்கு பின் கேது மகம் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் -
2 தக்காளியும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
வெயில் காலத்தில் முடி அதிகமா கொட்டாம இருக்கணுமா? இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பழைய ஸ்டைலில் காதலிப்பாங்களாம்... இவங்கள காதலிக்கிறது ரொம்ப போரான விஷயம்!
காதல் உறவுகள் மிகவும் எளிதான ஒன்றாகவும், ஆன்லைன் டேட்டிங் மிகவும் பிரபலமாகி விட்ட இந்த காலக்கட்டத்திலும், பழைய முறைகளில் காதலிப்பவர்கள் தங்கள் சொந்த சிறிய உலகில் சிறப்பான இடத்தைக் கொண்டுள்ளனர்.
காதல் உறவுகள் மிகவும் எளிதான ஒன்றாகவும், ஆன்லைன் டேட்டிங் மிகவும் பிரபலமாகி விட்ட இந்த காலக்கட்டத்திலும், பழைய முறைகளில் காதலிப்பவர்கள் தங்கள் சொந்த சிறிய உலகில் சிறப்பான இடத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் உறவுகளை புனிதமான பிணைப்பாக மதிக்கிறார்கள், இவர்கள் ஒருவருக்கொருவர் மெதுவாக காதலில் ஈடுபடுவதுடன் பழைய காதல் முறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் உடல்ரீதியான தொடர்புகளை விட கண்கள் மூலமான தொடர்புகளை விரும்புவார்கள். இவ்வாறு பழைய காதல் முறைகளில் நம்பிக்கை கொண்டவர்களை காதலிப்பது போரடிப்பதாக இருந்தாலும் உண்மையானதாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் இந்த பழைய காதல் முறைகளை விரும்புபவர்களாக இருப்பார்கள். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்
இவர்களுக்கு ரொமான்டிக்கான விஷயங்கள் என்னவென்பதிலேயே குழப்பம் இருக்கும். தங்கள் துணை தங்களின் காதலை ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்துவதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். அவர்கள் டேட்டிங் விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் கூட்டாளரை மெசேஜ் மற்றும் போன் கால்கள் மூலம் தெரிந்துகொள்ளும் ஒருவராக இருக்க முடியாது. கும்ப ராசிக்காரர்கள் பழைய காதல் முறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள்.

தனுசு
இவர்கள் தங்களுக்கான ஒருவரைக் கண்டறியும் வரை வேறு யாருடனும் டேட்டிங் செல்ல விரும்ப மாட்டார்கள். முதல் பார்வையிலேயே காதலில் விழுவதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், எனவே விளையாட்டான காதல்களுக்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் ஒரு உண்மையான அன்பிற்காக காத்திருக்கவும் அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிறார்கள், அது நீண்ட காலமாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பார்கள்.

ரிஷபம்
இவர்கள் அனைவரும் தங்கள் கனவுகள், ரகசியங்கள், லட்சியங்கள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் தங்கள் உண்மையான காதலருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய நீண்ட கால உறவுகளில் உள்ளனர். அவர்கள் ஒரு உறவில் மிக வேகமாக ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். உண்மையான மற்றும் நேர்மையான காதலே இவர்கள் விரும்புவதாகும்.

சிம்மம்
இவர்கள் உலகின் போக்கில் அதனுடன் வேகத்திலேயே பயணிப்பவர்களைப் போல் தோன்றலாம் ஆனால் உண்மையில், அவர்கள் விரும்புவது எந்தச் சிக்கலும் இல்லாமல் ஒருவரால் ஆழமாக நேசிக்கப்பட வேண்டும் என்பதுதான். இவர்கள் கண்மூடித்தனமாக காதலிப்பதுடன், ஒருவருக்காக மட்டும் காத்திருந்து காதலிக்கும் எண்ணத்தை விரும்புகிறார்கள் அவர்களுக்கான காதல் துணை கிடைத்தவுடன் சிறகை விறித்து பறக்க காத்திருப்பார்கள்.

மகரம்
இவர்கள் தங்களுக்கு கிடைக்காத இடங்களில் அன்பைத் தேடுவதை விட சரியான நபருக்காக காத்திருப்பதை அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், மகர ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளரிடமிருந்து வரும் வரை மெசேஜ்கள் மற்றும் காதல் பரிசுகளை விரும்புகிறார்கள். அவர்கள் இதயத்தில் உண்மையான மற்றும் நேர்மையான காதல் எப்போதும் நிறைந்திருக்கும். தங்களுக்கான ஒருவர் கிடைத்தவுடன் அவர்களுக்காக உலகையே கூட இவர்கள் மாற்றுவார்கள்.



Click it and Unblock the Notifications











