For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...!

|

உங்கள் காதல் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது நீங்கள் மற்றும் உங்கள் காதலன் அல்லது காதலியை சார்ந்தது. உங்களின் ஆளுமையை சார்ந்தது ஆகும். சில ஆளுமைகள் எளிதானவை, அத்தகைய நபரைக் காதலிப்பது மிகவும் பலனளிக்கும் அனுபவமாக இருக்கும். அந்த வாழ்க்கை நன்றாக இருக்கும். அதேபோல், கடினமானவர்களுடன் பழகுவது, குறிப்பாக காதலில் இருக்கும்போது, மிகவும் வெறுப்பாக இருக்கும். இது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

Zodiac Signs Who Are Most Difficult To Deal With When In Love

ஆரம்பத்தில், ஒரு கூட்டாளரைக் கையாள்வது எவ்வளவு எளிதானது அல்லது கடினம் என்று கணிப்பது எளிதல்ல. ஆனால் அவர்களின் ஆளுமை குறித்து சில குறிப்புகளை தெரிந்துகொள்வதற்கு அவர்களின் இராசி அறிகுறிகளை எப்போதும் உதவும். உங்கள் காதலனை அல்லது காதலியை சமாளிப்பதற்கு நீங்கள் மிகவும் சிரமப்படுகிறீர்களா? இல்லை உங்கள் காதலனின் குணாதிசியங்கள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு அவர்களின் ராசிபலன் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் காதலிக்கும்போது அவ்வளவு சுலபமாக செல்ல முடியாத சில அறிகுறிகளை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிதுனம்

மிதுனம்

மிகவும் எளிதில் சாமளிக்கக்கூடிய மிதுன ராசி நேயர்களை காதலிக்கும்போது சமாளிப்பது கடினம் என்பது நம்பமுடியாதது போன்று உள்ளது. அவர்கள் மிகவும் அன்பான மற்றும் உயிரோட்டமானவர்கள். அப்படியிருக்க இந்த பட்டியலில் மிதுன ராசி நேயர்களை வைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவர்கள் நல்ல பேச்சாளர்கள். ஆனால், இவர்கள் தங்கள் துணை என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதைக் கேட்பதற்கு விரும்பவில்லை. ஒரு வெற்றிகரமான உறவுக்கு அவர்களின் தகவல்தொடர்பு முக்கிய காரணம். இந்த தகவல்தொடர்பு பற்றாக்குறை காரணமாக, உங்கள் இருவருக்குள் புரிதல் இருப்பது மிகவும் குறைவு. ஆதலால், மிதுன ராசி நேயர்களை காதலிக்க்கும்போது சமாளிப்பது மிகவும் கடினம்.

கும்பம்

கும்பம்

ஒரு உறவில் தங்கள் துணைக்கு மிகவும் தேவையான இடத்தை வழங்குவதாக நம்பும் நபர்களில் கும்ப ராசி நேயர்கள் அதிகம். இவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால், கும்ப ராசி நேயர்கள் உறவின் உணர்ச்சிகளில் சிக்கல்களைக் கொண்டிருப்பார் மற்றும் அதை வெளிகாட்டிக்கொள்ளவும் மாட்டார். இது உங்கள் கும்ப ராசி காதலருக்கு உங்கள் உணர்வுகளை முழுமையாக அறிந்துகொள்வது ஒரு சவாலான பணியாக அமைகிறது. கும்ப ராசி நேயர்களை சமாளிப்பது மிகவும் கடினம். ஏனென்றால், அவரை நீங்கள் புரிந்துகொள்வதும் உங்களை அவர் புரிந்து கொள்வதும் மிகவும் கடினம். இது உங்கள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

ரிஷபம்

ரிஷபம்

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசி நேயர்களை போலவே, ரிஷப ராசி நேயரளை சமாளிப்பது கடினம். இவர்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள். சமரசம் குறித்து யோசனை செய்வது மிகக்குறைவு. ரிஷப ராசி நேயர்கள் மென்மையான பேச்சாளர்கள் மற்றும் அவர்கள் வார்த்தைகளால் உங்கள் இதயத்தை வெல்ல முடியும். ஆனால் அவர்கள் சொற்களின் அதே சக்தியைப் பயன்படுத்தி, உங்களை காயப்படுத்தலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

மிகவும் உணர்ச்சிகரமான விருச்சிக ராசி நேயர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார்கள். விருச்சிக ராசி நேயராக இருக்கும் உங்கள் காதலருக்கு நீங்கள் உண்மையுள்ளவர் அல்லது அவருக்கு விசுவாசமாக இல்லை என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால் கடவுள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவார். ஏனெனில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு கோபம் வரும்போது, அவர் விஷத்தைக் கக்குகிறார். ஒரு பொறாமை கொண்ட காதலனை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல்தான், விருச்சிக ராசி நேயர்களை காதலிப்பதும் மிகவும் கடினம். இந்த உறவு இன்னும் மோசமாக வளரக்கூடும். இந்த குணாதிசயங்கள் அனைத்தும் ஒரு நபர் விருச்சிக ராசிக்காரரை காதலிக்கும்போது கையாள்வது மிக கடினம்.

 மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்கள் அவர்களின் பிடிவாதமான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவருடைய எல்லா கருத்துக்களையும் நீங்கள் ஒப்புக் கொள்ளும் வரை, அவர்களை கட்டுப்படுத்துவது மிக கடினம். உங்கள் காதலனின் இராசி அடையாளம் மேஷம் என்றால், நீங்கள் அவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லை. பொறுமை குறைவாக இருப்பதால், இந்த இராசி அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு புள்ளியைக் கொண்டிருக்கும்போது அவர்களுடன் பழகுவது எளிதான காரியமல்ல. அவர்கள் தவறாக இருந்தாலும் கூட, அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேஷ ராசி நேயர்களுடன் நீங்கள் உறவில் இருப்பது மிகவும் கடினம். அவர்களை சமாளிப்பது மிகமிக கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Are Most Difficult To Deal With When In Love

Here are the list of zodiac signs who are most difficult to deal with when in love.
Story first published: Monday, January 20, 2020, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more