Just In
- just now
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 2 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Movies
லவ் யூ ஸோ மச் ... மாலத்தீவில் ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ்!
- Sports
அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..!
- News
நாளை அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்... கல்வித்துறை விசாரணை
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...
- Technology
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிக்காரங்களோட நேர்மைதான் இவங்களோட பெரிய பிரச்சினையே... உங்க ராசியும் இதுல இருக்கா?
அனைவருக்குமே நேர்மையாய் இருப்பவர்களைப் பிடிக்கும். அனைவருமே நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அனைவராலும் அவ்வாறு இருக்க முடியாது ஏனெனில் நேர்மையாய் இருப்பது மிகவும் கடினமாகும். பொய் சொல்வது யாருமே விரும்பாத ஒன்று ஆனால் அவர்கள் பொய் கூறுவதை தவறு என்று உணரமாட்டார்கள்.
கடினமான உண்மையாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும், அப்போதுதான் நாம் மற்றவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியும். நேர்மை சிலசமயம் முரட்டுத்தனமானதாக மாறும் நேர்மையாய் இருக்கிறேன் என்று சிலர் பிறரின் மனதை குத்திக் கிழிப்பார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியோ, அதனை கேட்டவர்களின் மனநிலை பற்றியோ இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு அவர்கள் பிறந்த ராசி கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இவ்வாறு கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் இருந்து நீங்கள் கண்டிப்பாக உண்மையைப் பெறுவீர்கள். எந்தவொரு விஷயத்திலும் எது நல்லது, கெட்டது என்று தெரிந்து கொள்ள நீங்கள் எந்த தயக்கமும் இன்றி ரிஷப ராசிக்காரர்களை அணுகலாம். ரிஷப ராசிக்காரர்கள் பொய்களை நம்பமாட்டார்கள் அதேபோல இவர்கள் போலியான அணுகுமுறைகளையும் நம்பமாட்டார்கள். நீங்கள் கேட்க விரும்பாத உண்மைகளை கூட இவர்கள் கூறுவார்கள், அதனால் நீங்கள் அழுதாலும் கவலைப்படமாட்டார்கள். இரக்கமில்லாமல் இவர்களின் நேர்மையை காட்டுவார்கள்.

மிதுனம்
ராசிகளிலேயே இரக்கமில்லாமல் உண்மையைக் கூறும் ராசி இவர்கள்தான். இவர்கள் உங்களிடம் உண்மையைக் கூற நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மௌனம் கலைத்து உங்களிடம் உண்மையை கூறும் போது கண்டிப்பாக உங்களை காயப்படுத்துவார்கள். இவர்களின் நேர்மை மற்றவர்களை காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் இவர்கள் நேர்மையாக இருப்பதே மற்றவர்களை காயப்படுத்துவதற்காகத்தான்.
MOST READ: உங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...!

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நீங்கள் கேட்க விரும்பாவிட்டாலும் இவர்களாகவே உங்களிடம் உண்மையைக் கூறுவார்கள். அவர்கள் இதை வேண்டுமென்றே செய்வதில்லை மாறாக தங்கள் நேர்மையை நிரூபிக்க செய்கிறார்கள். இவர்களை பொறுத்த வரையில் இவ்வாறு உங்களை காயப்படுத்தும் உண்மையைக் கூறுவதை உங்களுக்கு செய்யும் உதவி என்றும், உங்களுக்கு வெளிச்சத்தின் பாதையை காட்டுவது என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இது உங்களை காயப்படுத்தும் என்றாலும் அவர்கள் உங்களை விரட்டி விரட்டி வந்து சொல்வார்கள், இது உண்மையில் மோசமான செயலாகும்.

கன்னி
இவர்கள் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள், கண்டிப்பாக நேர்மையாக இருக்கிறேன் என்று இரக்கமில்லாமல் நடந்து கொள்வார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் அதனை ஒப்புக்கொள்ளும் வரை உங்களை விடாமல் திரும்ப திரும்ப உண்மையைக் கூறுகிறேன் என்று உங்களை தொந்தரவு செய்வார்கள். இவர்கள் ஒருபோதும் பேச்சை குறைத்துக் கொள்ள மாட்டார்கள், நீங்கள் நேரில் இல்லையென்றாலும் உங்களிடம் எந்த வழியிலாவது உண்மையைக் கூறிவிடுவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மையின் உச்சத்தில் இருப்பார்கள், ஆனால் அது மென்மையானதாக இருக்கும் என்று நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கக்கூடாது. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக உண்மையை மென்மையாக்குவதை இவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். உண்மையை சொல்வதால் மோதலே வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இவர்கள் கடுமையாக பேசுவார்கள். உண்மை என்னவென்றால், இவர்களுக்கு உண்மையை மறைத்து பேசுவதற்கு நேரமும் இல்லை அதில் விருப்பமும் இல்லை. கலப்படமில்லாத உண்மையை பெற விரும்பினால் நீங்கள் நேரடியாக செல்ல வேண்டியது மகர ராசிக்காரர்களிடம்தான்.
MOST READ: பெண்கள் எந்தெந்த நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள் தெரியுமா?

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் நேர்மையைப் பற்றி அவர்களுடன் இருப்பவர்கள் நன்றாகவே அறிவார்கள். எனவே உண்மையான விமர்சனத்திற்கு எப்போதும் இவர்களை அணுகலாம். இவர்கள் எப்போதும் உண்மையைக் கூறுவார்கள், எப்போதாவது பொய்யைக் கூறுவார்கள், ஆனால் உண்மையைக் கூறவேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் உணர்ச்சிரீதியாக எவ்வளவு துன்புற்றாலும் அதனைப் பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள்.