Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
இந்த 5 ராசிக்காரங்க உங்களோட ப்ரண்ட் ஆகுறத்துக்கு முன்னாடி ஆயிரம் தடவ யோசிப்பாங்களாம்...ஏன் தெரியுமா?
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அவர்கள் யாரையாவது நம்புவது மிகவும் சவாலானது. முதுகில் குத்தும் நண்பர்களுடன் இருப்பதை விட அவர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள்.
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவ்வுலகில் நண்பர்கள் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். நண்பர்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள். உங்கள் மகிழ்ச்சி, கவலை மற்றும் பிரச்சனை என எல்லா நேரத்திலும் உங்களுடன் துணையாக இருக்கவும் உதவும் நபராகவும் நண்பர்கள் இருப்பார்கள். ஒரு நல்ல நண்பன் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவார்கள். அதேநேரம் மோசமான அல்லது தவறான நண்பர்கள் உங்கள் வாழ்க்கையையே குழிக்குள் தள்ளிவிடுவார்கள். மனவேதனை அல்லது துரோகத்திற்கு ஆளாகும்போது ஒருவர் நண்பர்களை எச்சரிக்கையாக தேர்ந்தெடுக்கிறார். இந்த கடுமையான நம்பிக்கை சிக்கல்கள் காரணமாக ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி சிந்திக்கிறார்.

இதனால், எளிய நண்பர்களை உருவாக்கும்போது கூட அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஜோதிடம் பன்னிரண்டு ராசிகளைக் கொண்டு அவர்களின் ஆளுமைகளின் நுணுக்கங்களை நிர்ணயிப்பதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்வதை சாத்தியமாக்குகிறது. எனவே, நண்பர்களை உருவாக்கும்போது கவனமாக இருக்கக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் மக்களை எளிதில் நம்ப மாட்டார்கள். அவர்கள் ஒரு நபரை அரவணைக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் முதுகில் குத்தாத அல்லது துரோகம் இழைக்காத நண்பர்களைத் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் கடந்த காலத்தில் ஒருமுறை நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டிருந்தால், ரிஷப ராசி நேயர்கள் தனியாகவே இருக்க விரும்புகிறார்கள். முதுகுக்குப் பின்னால் பேசும் நண்பர்களை அவர்கள் விரும்புவதில்லை.

கடகம்
கடக ராசிக்காரர்கள் யாரையும் நம்புவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் ஆழமாக காயப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்கள் உண்மையான உணர்ச்சிகளை மறைக்கிறார்கள். அதனால் யாரும் தங்களை பலவீனமாக கருதக்கூடாது என நினைக்கிறார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் புதிய நண்பர்களை உருவாக்கவோ அல்லது தங்கள் வட்டத்தை விரிவுபடுத்த புதிய நபர்களை சந்திக்கவோ மாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அவர்கள் யாரையாவது நம்புவது மிகவும் சவாலானது. முதுகில் குத்தும் நண்பர்களுடன் இருப்பதை விட அவர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள். புதியவர்களை சந்திக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். அந்த நபர் தனது நண்பராக வேண்டுமா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்ள, அந்த நபரை அவர்கள் தங்கள் சொந்த வழியில் சோதிக்க முயற்சிப்பார்கள். அதன் பின்னரே நண்பராக ஏற்றுக்கொள்வார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் வெளிப்படையானவர்கள். அவர்கள் நம்பக்கூடிய நபர்களுடன் உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு, வாழ்நாள் நட்பு மிகவும் முக்கியமானது. ஆனால், இந்த ராசிக்காரர்களின் நண்பர்கள் அவர்களைக் காட்டிக்கொடுக்க முயன்றால், மகர ராசிக்காரர்கள் மிகவும் மோசமாக மாறுவார்கள். அதன் பின்னர், யாரையும் நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பார்கள்.

மீனம்
நம்பிக்கை பிரச்சினைகளால் மீன ராசிக்காரர்கள் எளிதில் நண்பர்களை உருவாக்க மாட்டார்கள். யாரிடமும் நண்பர்களாக இருக்க அவர்கள் அதிகம் யோசிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால், இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பவில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஆனால் அந்த நபர் அவர்களை வென்றால், மீன ராசிக்காரர்கள் சிறந்த நண்பர்களாக மாறுவார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சமூகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். புதிய மக்களைச் சந்திக்கும்போதும், பழகும்போதும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். தங்கள் நண்பர்களாக இருக்க விரும்புபவர்களை அவர்கள் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரிய நண்பர்கள் பட்டாளத்தோடு இருக்க விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications