Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த 5 ராசிக்காரங்க உறவில் ஹிட்லர்போல சர்வாதிகாரியா இருப்பார்களாம்... உங்க துணையோட ராசி என்ன?
எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற தீவிர ஆசை கன்னி ராசி நேயர்களுக்கு இருக்கிறது. அவர்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
மனிதர்களின் இயல்பு மற்றும் நடத்தை என்பது ஒவ்வொருவரை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இவ்வுலகில் எல்லாரும் ஒரே மாதிரியான குணநலன்களை பெற்றிருக்க முடியாது. பொதுவாக உறவுகளில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அந்த உறவுக்கு நல்லதல்ல. ஏனெனில், இருவரின் விருப்பம் மற்றும் கருத்துப்படி செல்வதே நல்ல உறவுக்கு அடையாளம். ஆனால், பெரும்பாலான உறவுகளில் தம்பதிகளில் ஒருவர் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருக்கிறார். உறவுகளில் ஆதிக்கம் செலுத்துவது என்பது ஒரு நபர் கையாள முடியாத அளவுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். உறவைக் கட்டுப்படுத்துவது முதல் மற்ற நபருக்கான முடிவுகளை எடுப்பது வரை, ஆதிக்கம் செலுத்த பலர் விரும்பலாம்.

ஆனால், ஆதிக்கும் செலுத்தும் நபர்களின் துணை உறவில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. இந்த மேலாதிக்க மக்கள் எல்லாவற்றையும் பொறுப்பேற்கும் போக்கைக் கொண்டுள்ளனர். இந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் அடையாளம் காணலாம். எனவே, உறவுகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அதிக வெறுப்பை உமிழும் ஆளுமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த ராசிக்காரர்களின் பங்குதாரர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுக்கும் நேரங்களில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் சொந்த வழிகளில் மட்டுமே விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் முன் மற்றவர்கள் தலைமை அல்லது பொறுப்பு ஏற்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் மட்டுமே உயர்ந்தவர் என்பதை காட்ட அவர்கள் மற்றவர்களிடம் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பார்க்கும்போது உங்களுக்கு சாந்தமாக தோன்றலாம். ஆனால் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைத்த விஷயங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால், தாங்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்கள் ஒரு கடினமான சூழ்நிலையை தனித்தனியாக நிர்வகிக்கிறார்கள்.

கன்னி
எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற தீவிர ஆசை கன்னி ராசி நேயர்களுக்கு இருக்கிறது. அவர்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் அதிகாரம் மிக்கவர்கள். மற்றவர்களுக்கு கட்டளையிட இவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இதனால் பல நேரங்களில், இந்த ராசிக்காரர்களின் துணை உறவில் அழுத்தத்தை உணரலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள். ஆனால் நேரம் வரும்போது, அவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ப விரைவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது சற்று வித்தியாசமாக இருக்கும். இவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையேதான் இந்த ராசிக்காரர்களின் துணை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்கள். இவர்கள் உறுதியானவர்கள் மற்றும் மிகவும் தைரியமானவர்கள். இவர்கள் மட்டுமே தலைமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு உத்தரவுகளை வழங்குகிறார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்களே எல்லா வேலைகளையும் செய்ய விரும்புவதால், அவர்களின் பங்குதாரர் பொறுப்பேற்கும்போது அவர்கள் அதை வெறுக்கிறார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். அவர்கள் எந்தவொரு முடிவுகளையும் எடுக்க தங்கள் துணையை சார்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் துணைக்கு கட்டளையிட்டு ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. இந்த ராசிக்காரர்களால் தங்கள் உறவுகளில் ஆதிக்கம் செலுத்தவே முடியாது.



Click it and Unblock the Notifications