Just In
- 7 hrs ago
மேங்கோ கிரனிட்டா
- 7 hrs ago
பெண்கள் அவர்களின் வயதிற்கேற்ப என்னென்ன உணவுகளை அவசியம் சாப்பிடணும் தெரியுமா?
- 8 hrs ago
பொடுகு தொல்லைய போக்கி உங்க முடிய கருகருன்னு நீளமா வளர வைக்க வீட்டுல செய்யும் இந்த 2 எண்ணெய் போதுமாம்!
- 8 hrs ago
சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு இந்த மாரடைப்பு வரப்போகுதாம்!
Don't Miss
- News
இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Movies
சினிமாவை விட்டு விலகுகிறேன்.. பிரபல நடிகர் எடுத்த அதிரடி முடிவு.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்க 2022-ல் சிங்கிளாதான் இருப்பாங்களாம்...லவ் பண்ற அதிர்ஷ்டமே இல்லையாம் இவங்களுக்கு!
இன்னும் சில தினங்களில் 2022 பிறக்கப்போகிறது. அனைவரும் புது வருடத்திற்கும், பல்வேறு மாற்றங்களுக்கும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை ஒருதலைக் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கும், காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும் புத்தாண்டிற்காக காத்திருக்கலாம். ஆனால் வரப்போகும் ஆண்டின் கிரக மாற்றங்கள் அனைவருக்கும் சாதகமானதாக இல்லை.
உண்மைதான், சிலரின் காதல் இந்த ஆண்டு வெற்றிபெற்று திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. ஆனால் சிலரின் காதல் தோல்வியில் முடியவும், சிலர் தங்கள் காதலை வெளிப்படுத்த வாய்ப்பே கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. அதன்படி சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சிங்கிளாகவே காலத்தை கடத்தப் போகிறார்கள். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
இந்த ஆண்டு உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது. கிரக மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததாலும், உங்கள் காதல் வாழ்க்கை முற்றிலும் குழப்பத்தில் உள்ளதாலும் இந்த ஆண்டு நீங்கள் பல தலைவலிகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வளமான ஆண்டாக இருந்தாலும், நீங்கள் உங்களுக்கான சரியான துணையை கண்டுபிடிப்பீர்கள் என்று ஆசைபட வேண்டாம். ஆண்டின் இறுதியில் உங்கள் காதல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் பழைய காயங்களை குணப்படுத்தி காதலில் உங்களின் தேவை என்னவென்பதை புரிந்து கொள்ள இந்த காலக்கட்டத்தை பயன்படுத்துங்கள். வீம்புக்கென்று எந்த காதல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள், அது உங்கள் காயத்தை அதிகரிக்கும்.

மிதுனம்
இந்த ஆண்டின் கிரக மாற்றங்கள் உங்களுக்கு குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் காதல் உறவுகள் வளர உகந்ததாக இல்லை. நீங்கள் காதலிக்க விரும்பினால், இந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் நீங்கள் சிங்கிளாக இருக்க விரும்பினால், 2022 அதைச் செய்ய ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும். இரட்டை ஆளுமை கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதிய நண்பர்கள் மற்றும் உறவுகளை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத காதல் விவகாரங்களில் ஈடுபட்டு தோல்வியை தழுவாதீர்கள்.

சிம்மம்
பன்முகத் திறமை கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2022 காதலில் சிறப்பான ஆண்டாக இருக்கப்போவதில்லை. சூரியன் உங்கள் ராசியில் குழப்பத்தை ஏற்படுத்தும் இடத்திற்கு வருவதால் 2022-ல் காதல் உங்களுக்கு கடினமான செயலக மாறும். 2022 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்களின் 2022 ஆம் ஆண்டு காதல் கணிப்புகளின்படி காதலில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மோதல்களை சந்திக்க நேரிடும். நீங்கள் மிகவும் முக்கியமானதாக நினைக்கும் உங்களின் சுதந்திரம் உங்களிடம் இருந்து பறிக்கப்படுவதாக நீங்கள் உணரலாம். எனவே நீங்கள் சிங்கிளாக இருப்பதே சிறந்தது என்ற முடிவிற்கு வர வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியினருக்கு, சனி உங்கள் ராசியில் இருப்பதால் காதலை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். நீங்கள் ஒரு உறவைத் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான நபர்களைச் சந்திக்காமல் போக வாய்ப்புள்ளது. நீங்கள் ஏற்கனவே உறவில் இருந்தால் உங்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எந்தவொரு மாற்றத்திற்கும் அழுத்தம் கொடுக்காமல் அதன் போக்கில் விட்டுவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. நீங்கள் மறக்க நினைக்கும் கடந்த கால உறவுகள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட வாய்ப்புள்ளது. அதிலிருந்து இலாவகமாக தப்பிவிடுங்கள், இல்லையேல் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் காதல் தேடல் வருடத்தின் தொடக்கத்தில் சிறப்பாக இருக்கும். ஆனால் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தனக்கு சரியானவர்கள் இல்லை என்பதை விரைவிலேயே புரிந்து கொள்வார்கள். மேலும் தீவிரமான பிணைப்புக்கான ஆர்வமும் இவர்களிடம் இருக்காது. உங்களின் கடந்த கால உறவுகளில் நீங்கள் செய்த தவறுகள் என்ன, அதனை எதிர்காலத்தில் எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான காலமிது. எந்தவொரு புதிய உறவையும் திடீரென ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த புதிய காதலுக்காக நீங்கள் பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதலில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து பல்வேறு விவாதங்களில் ஈடுபடலாம். தீவிரமான காதல் உறவு வேண்டுமென்று நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம்.