For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் யூசுப் மெஹரலி முக்கிய பங்கு வகித்தவர். சுதந்திர இயக்கத்தின் போது மெஹரலி, எட்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

|

வெள்ளையனே வெளியேறு இயக்கம் அல்லது ஆகஸ்டு இயக்கமானது, இரண்டாம் உலகப் போரின் போது, 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் தலைமையில், இந்திய தேசிய காங்கிரஸ் குழுவால் மும்பையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர கோரி முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் யூசுப் மெஹரலி முக்கிய பங்கு வகித்தவர். அவர் விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களில் தலைமை வகித்தவர். சுதந்திர இயக்கத்தின் போது மெஹரலி, எட்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய 'வெள்ளையனே வெளியேறு' கோஷத்தை காந்திஜி, இந்தியாவின் நாடு தழுவிய இறுதி சுதந்திர பிரச்சாரத்திற்காக ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான யூசுப் மெஹரலி "நான் அசிங்கத்தையும் கொடூரத்தையும் வெறுக்கிறேன், அதனால் தான் நான் ஒரு சோசலிஸ்ட். எனது சோசலிசம் அழகியல் மற்றும் நெறிமுறை வளாகங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பொருளாதாரத்தை அல்ல." என எழுதினார். ஆர்வமுள்ள வாசகர் மற்றும் கலைகளின் இணைப்பாளர், அவரே ஓரிரு புத்தகங்களையும் எழுதியதோடு, ஒரு பத்திரிகையை நிறுவினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

யூசுப் மெஹரலி 1903ஆம் ஆண்டு கோஜா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஜாபர் மெஹரலி. இவர் ஒரு பெரிய வணிகர். கொல்கத்தாவில் தொடக்கக் கல்வி கற்ற யூசுப் மெஹரலி, மும்பையில் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். பின் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதன்பிறகு மும்பையில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து எல்.எல்.பி. பட்டம் பெற்றார். ஆனால் அரசியலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி, பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழக்கறிஞர் தொழில் செய்ய சான்று அளிக்கவில்லை.

உண்மை #2

உண்மை #2

1925ஆம் ஆண்டு ‘இந்திய இளைஞர் சங்கம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். ராம் மனோகர் லோஹியா, அருணா அசாஃப் அலி மற்றும் அச்சியுத் பட்வர்தன் உள்ளிட்ட அவரது சோசலிச சகாக்களை ஓர் அணியாக திரட்டுவதற்கும், காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், மறைமுகமாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்கும் யூசுப் மெஹரலி பொறுப்பேற்று கொண்டார்.

உண்மை #3

உண்மை #3

1940 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகத்தின் போது யூசுப் கைது செய்யப்பட்டு, அடுத்த ஆண்டிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். சிறையில் இருந்து வந்ததும், அவர் பாட்னாவில் நடந்த அகில இந்திய மாணவர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் அவர் பேசிய பேச்சால், அரசு அவரைக் கைது செய்து, லாகூர் சிறையில் 1 வருடம் சிறையில் வைத்தது. சிறையில் இருக்கும் போது அவர் மும்பையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சோசலிஸ்டும் இவரே ஆவார்.

உண்மை #4

உண்மை #4

1928 ஆம் ஆண்டில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரைக்க, ஏகாதிபத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து "திரும்பி போ சைமன்" என்ற முழக்கத்தை கொண்டு வந்தவர் யூசுப் மெஹரலி.

உண்மை #5

உண்மை #5

சுதந்திர போராட்டத்தின் போது, மெஹரலி எட்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1946ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் எம்.எல்.ஏ ஆகவும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஆகவும் பொறுப்பேற்றார். மும்பையில் இருந்த யூசுப் மெஹரலி ஜூலை மாதம் 1950ஆம் ஆண்டு காலமானார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yusuf Meherally: Facts On Man Who Coined The Iconic Slogan 'Quit India'

Yusuf Meherally Played A Major Role In Indias Struggle For Independence. Here are some Facts On Man Who Coined The Iconic Slogan 'Quit India'.
Desktop Bottom Promotion