Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2023-ல் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
கிரகங்களின் நிலையால் 2023 ஆம் ஆண்டில் தொழில் நல்ல அதிர்ஷ்டத்தை பெறவுள்ளார்கள். இப்போது 2023 ஆம் ஆண்டில் தொழிலில் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாம் ஒவ்வொருவரும் வரக்கூடிய புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புவோம். ஒரு புதிய ஆண்டில் நாம் எதிர்பார்ப்பது, நமது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதை தான். ஆனால் இதெல்லாம் நடக்குமா என்பதை ஜோதிடத்தைக் கொண்டு அறிய முடியும்.

2023 ஆம் ஆண்டில் குரு, சனி போன்ற பெரிய கிரங்கள் ராசியை மாற்றவுள்ளன. எனவே இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே இருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் நிலையால் 2023 ஆம் ஆண்டில் தொழில் நல்ல அதிர்ஷ்டத்தை பெறவுள்ளார்கள். இப்போது 2023 ஆம் ஆண்டில் தொழிலில் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2023 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்த ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் சனி மற்றும் குருவின் அருளைப் பெற்றிருப்பார்கள். இதனால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சனியின் செல்வாக்கினால் வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் தொழிலில் இன்னும் சிறப்பு கவனம் செலுத்தினா, நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். இதனால் இந்த ஆண்டில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குறிப்பாக தொழிலில் முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். பல புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். அதனால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனிப் பெயர்ச்சி நிகழ்வதால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். வருமானம் கூடும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஆண்டில் பங்குச்சந்தை, லாட்டரி ஆகியவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். எண்ணெய், இரும்பு, பெட்ரோலியம் போன்ற தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications