For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வேலைகளில் இருப்பவர்களின் நுரையீரல் எப்பொழுதும் ஆபத்தில் இருக்குமாம்... ஜாக்கிரதை...!

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணம் அவர்களின் பணிசார்ந்த சூழ்நிலையாகவும் இருக்கலாம்.

|

நமது உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று நுரையீரல் ஆகும். நுரையீரலில் ஏற்படும் குறைபாடு நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.நுரையீரலில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் புகைபிடித்தல் ஆகும், ஆனால் இப்போதுள்ள கால சூழ்நிலையில் புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Worst Jobs for Your Lungs

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணம் அவர்களின் பணிசார்ந்த சூழ்நிலையாகவும் இருக்கலாம். உண்மைதான் சில வேலை செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதென ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த வேலை செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கட்டுமானத் தொழில்

கட்டுமானத் தொழில்

கட்டுமான இடங்கள், கட்டிட புனரமைப்பு போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மெசோதெலியோமா மற்றும் அஸ்பெஸ்டோசிஸ் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து வெளிப்படும் தூசிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஆஸ்துமா பிரச்சினை எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய கட்டிடங்களைச் சுற்றி வேலை செய்யும் போது சுவாசக் கருவிகளை உபயோகப்படுத்துவதும், புகைபிடிக்காமல் இருப்பதும் உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

 தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் அதிகளவு மாசு, இரசாயனங்கள், ஆபத்தை உண்டாக்கும் வாயு போன்றவற்றை அதிகம் சுவாசிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மைக்ரோவேவ் பாப்கார்னில் இருக்கும் டயசெட்டில் COPD நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

மருத்துவம்

மருத்துவம்

மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களில் 8 முதல் 12 சதவீதத்தினர் லாடெக்ஸை உபயோகிக்கிறார்கள், இது ஆஸ்துமாவுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். நீங்கள் தனிப்பட்ட முறையில் லேடெக்ஸ் கையுறைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், சக பணியாளர்கள் தங்கள் கையுறைகளை அகற்றும்போது லேட்டெக்ஸின் சிறிய துகள்கள் காற்றில் பறக்கின்றன. இதனை சுவாசிக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ:பேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

டெக்ஸ்டைல்ஸ்

டெக்ஸ்டைல்ஸ்

பிசினியோசிஸ் அல்லது பழுப்பு நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் டெக்ஸ்டைலில் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த இடங்களில் பஞ்சு மற்றும் மற்ற பொருட்களில் இருந்து வெளிப்படும் தூசுகளை பணியாளர்கள் சுவாசிக்கிறார்கள். பஞ்சின் துகள்கள் நாசித்துவாரத்திற்குள் நுழையும் போது அது பல்வேறு சுவாசப்பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் புகைபிடிக்காமல் இருப்பது நல்லது.

 பாடம் நடத்துவது

பாடம் நடத்துவது

கற்பித்தல் என்பது எந்த தொல்லையும் இல்லாத சுத்தமான தொழிலாகும். ஆனால் அவர்கள் எந்த இடத்தில் இருந்து பாடம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் பழமையான கட்டிடங்களில் இருந்து பாடம் நடத்துபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் பள்ளிகளிலும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம்.

 ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்பவர்களுக்கு நுரையீரல்க் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம், குறிப்பாக பழுது பார்க்கும் துறையில் இருப்பவர்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐசோசயனேட் மற்றும் பாலியூரிதீன் தயாரிப்புகள் வாகனங்களின் மீது ஸ்பிரே செய்யும்போது அது சருமத்தின் மீது எரிச்சலையும், அலர்ஜியையும் ஏற்படுத்தும். மேலும் சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். சருமம் மென்மையாக உள்ளவர்களுக்கு ஐசோசயனேட் எளிதில் ஆஸ்துமாவை ஏற்படுத்தும்.

சுரங்கத் தொழில்

சுரங்கத் தொழில்

சுரங்கத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நுரையீரல் அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும். போதுமான அளவு காற்றோட்டமும், பாதுகாப்பும் இல்லாததால்தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த இடங்களில் வேலை செய்பவர்கள் போதுமான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

MOST READ:வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா?

 தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள் அதிகளவு புகையையும், பல்வேறு இரசாயனங்களையும் சுவாசிக்க நேரிடும். மேலும் இவர்கள் உபயோகிக்கும் உபகரணங்கள் இவர்களை நெருப்பிலிருந்து பாதுக்கலாம் ஆனால் இது அவர்களின் உடல் உறுப்புகளின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதில் நுரையீரலும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Jobs for Your Lungs

Here are fields that can be risky for your lung health.
Story first published: Thursday, July 25, 2019, 18:22 [IST]
Desktop Bottom Promotion