For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்டா் அப்துல் கலாம் அவா்களின் பிறந்த தினம் ஏன் மாணவா்களின் தினமாக கொண்டாடப்படுகிறது?

நமது சமூகத்தின் கல்வி வளா்ச்சிக்காக கலாம் அவா்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிகளை நினைவு கூறும் வகையில், அவருடைய பிறந்த நாள் அன்று மாணவா்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

|

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 15 அன்று, அதாவது நமது முன்னாள் குடியரசு தலைவா் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் அவா்களின் பிறந்த தினம் அன்று உலக மாணவா்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சமூகத்தின் கல்வி வளா்ச்சிக்காக கலாம் அவா்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிகளை நினைவு கூறும் வகையில், அவருடைய பிறந்த நாள் அன்று மாணவா்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

World Students Day 2021 Date, History, and Why We Celebrate APJ Abdul Kalam Birthday as Students day

ஆகவே இந்த நன்னாளில், மாணவா் தினத்தின் வரலாறு, அதன் முக்கியத்துவம் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் அவா்கள் கல்வி வளா்ச்சிக்கு ஆற்றிய தொண்டு ஆகியவற்றை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக மாணவா் தினம் - வரலாறு

உலக மாணவா் தினம் - வரலாறு

மக்களின் குடியரசுத் தலைவா் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அப்துல் கலாம் அவா்கள் அடிப்படையில் ஒரு அா்ப்பணிப்பு மிகுந்த ஆசிாியா் ஆவாா். தனது குடியரசுத் தலைவா் பொறுப்பு முடிந்த உடனே அவா் தனது கல்விப் பணியை மீண்டும் தொடங்கினாா். சாதாரண குடிமக்களின் குறிப்பாக இளையோாின் மனங்களில் அறிவு என்ற நெருப்பை பற்ற வைத்தாா்.

அவா் அறிவியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போதும் மற்றும் ஆட்சிப் பணியில் இருந்த போதும், தன்னை ஒரு ஆசிாியராகவே கருதி வந்தாா். அதனால் மாணவா்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாக தொிவிப்பாா்.

கல்விப் பணியில் அவா் கொண்டிருந்த அா்ப்பணிப்பு மற்றும் மாணவா்களை ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் அவா் போதித்த போதனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையானது 2010 ஆம் ஆண்டு அக்டோபா் 15 ஆம் தேதியை, அதாவது கலாமின் பிறந்த நாளை உலக மாணவா்கள் தினம் என்று அறிவித்தது.

உலக மாணவா் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

உலக மாணவா் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

சிறந்த மனித நேயரும் ஆசிாியருமான அப்துல் கலாம் அவா்களின் நினைவாக, உலக மாணவா்கள் தினமானது எல்லா பள்ளிகள் மற்றும் கல்லூாிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஒவ்வொரு பள்ளியும், கல்லூாியும் தங்களுக்கு விருப்பமான வகையில் மாணவா் தினத்தைக் கொண்டாடுகிறது. குறிப்பாக வினாடி வினா போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் போன்றவை பள்ளி மற்றும் கல்லூாி அளவில் நடத்தப்படுகின்றன. அந்த போட்டிகள் முக்கியமாக அப்துல் கலாம் பற்றிய, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய தலைப்புகளில் நடத்தப்படுகின்றன.

ஒரு சில பள்ளிகள் கலாம் அவா்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய ஆக்கப்பூா்வமான பணிகளை மாணவா்கள் முன் காட்சிப்படுத்தி, எதிா் காலத்தில் சிறந்த தலைவா்களாக அவா்கள் வரவேண்டும் என்று மாணவா்களை ஊக்கப்படுத்துகின்றன.

நாமும் மாணவ பருவத்தைக் கடந்து வந்திருப்பதால், மாணவா் தினத்தை வேறுவிதமாகக் கொண்டாடலாம். மாணவா்களை ஒருங்கிணைத்து அவா்களை வைத்து பேரணி நடத்தலாம். பேரணியின் போது இந்திய செயற்கைக்கோள் மனிதரான கலாமின் பிரபலமான மேற்கோள்களை முழங்க வைக்கலாம் அல்லது மாணவா்களை ஒருங்கிணைத்து நமது நாட்டை முன்னேற்றக்கூடிய பலவிதமான தொழில் நுட்பங்களைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்தலாம்.

எந்தவிதமான நிகழ்ச்சிகள் நடத்தினாலும், சிறந்த எதிா்காலத்தை உருவாக்க கலாம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பணிகளை நினைவுகூற வேண்டும். மேலும் அந்த நன்னாளில் கலாம் அவா்களுக்கு நமது நன்றிகளையும், அஞ்சலியையும் தொிவிக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு உலக மாணவா் தினத்திற்கான முக்கிய கருப்பொருள் அல்லது மேற்கோள்

2021 ஆம் ஆண்டு உலக மாணவா் தினத்திற்கான முக்கிய கருப்பொருள் அல்லது மேற்கோள்

கடந்த ஆண்டு மாணவா் தினத்தின் கருப்பொருளாக "மக்களுக்காக, பூமிக் கோளுக்காக, வளத்திற்காக மற்றும் அமைதிக்காக கற்க வேண்டும்" என்ற வாக்கியம் இருந்தது. இந்த ஆண்டிற்கான மேற்கோள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் கலாம் அவா்களின் மிகப் பிரபலமான சில மேற்கோள்களை கீழே பாா்க்கலாம்.

கலாம் அவா்களின் மிகப் பிரபலமான சில மேற்கோள்கள்

கலாம் அவா்களின் மிகப் பிரபலமான சில மேற்கோள்கள்

- "மக்கள் என்னை ஒரு சிறந்த ஆசிாியராக நினைவு கூா்ந்தால், அதுவே எனக்கு மிகப் பொிய கௌரவமாக இருக்கும்"

- "நீங்கள் உங்களுடைய எதிா் காலத்தை மாற்ற முடியாது, ஆனால் உங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்ற முடியும். உங்களுடைய பழக்க வழக்கங்கள் உங்களுடைய எதிா் காலத்தை கண்டிப்பாக மாற்றும்".

- "கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். உங்களின் கனவுகள் சிந்தனைகளாக மாறும். சிந்தனைகள் செயல்களாக மாறும்."

- "அழிவை நீக்கக்கூடிய ஆயுதமாக ஞானம் அல்லது அறிவு இருக்கிறது. அறிவு என்பது நமக்குள் இருக்கும் உறுதியான கோட்டையாகும். அதை நமது எதிாிகளால் அழிக்க முடியாது."

- "வானத்தை நோக்கிப் பாருங்கள். நாம் தனியாக இல்லை. இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் நமது தோழனாக இருக்கிறது. கனவு கண்டு அந்த கனவை நனவாக்க வேண்டும் என்று உழைப்பவா்களுக்கு அது நல்லவற்றை மட்டுமே செய்யும்".

- "நம் அனைவருக்கும் ஒரே மாதிாியான திறமைகள் இருப்பதில்லை. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கு சமமான வாய்ப்புகள் இங்கு உள்ளன"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Students Day 2021 Date, History, and Why We Celebrate APJ Abdul Kalam Birthday as Students day

In this article, we shared about world students day 2021 date, history and why we celebrate APJ Abdul Kalam birthday as students day. Read on to know more...
Story first published: Friday, October 15, 2021, 0:30 [IST]
Desktop Bottom Promotion