Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ரம் பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை இரண்டாவது சனிக்கிழமை உலக ரம் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக ரம் தினம் ஆகும். இது 2019 ஆம் ஆண்டில் ஸ்பிரிட் எழுத்தாளரும், உலக ரம் கையேட்டின் ஆசிரியருமான பால் ஜாக்சன் என்பவரால் தொடங்கப
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை இரண்டாவது சனிக்கிழமை உலக ரம் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று தான் உலக ரம் தினம். இது 2019 ஆம் ஆண்டில் ஸ்பிரிட் எழுத்தாளரும், உலக ரம் கையேட்டின் ஆசிரியருமான பால் ஜாக்சன் என்பவரால் தொடங்கப்பட்டது.
நீங்கள் ரம் பிரியராக இருந்தால், உலக ரம் தினத்தை உங்களுக்குப் பிடித்த பிராண்ட்டு ரம் அருந்தி கொண்டாடுங்கள். அதோடு இந்த ரம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

பழமையான மதுபானம்
ரம் என்பது நடைமுறைக்கு வந்த முதல் பிராண்டட் மதுபானம் ஆகும். முதல் ரம் ஆனது 1620 களில் கரிபியனில் வடிகட்டப்பட்டு தயாரிக்கப்பட்டது. ஆகவே இன்று வரை இது மிகப்பெரிய ரம் டிஸ்டில்லரியாக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரம் என்பது மருத்துவமல்லாத நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டது மற்றும் இதுவே உட்கொள்வதற்கான முதல் ஆல்கஹால் ஆகும்.

சர்க்கரை உள்ளடக்கம்
ரம்மில் உள்ள சர்க்கரையின் முக்கிய ஆதாரம் கரும்புச்சாறு. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ரம் கரும்பு சாற்றில் இருந்து வடிகட்டித் தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் பதப்படுத்தப்படுகிறது.

பணமாக பயன்படுத்தப்பட்டது
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, 18 ஆம் நூற்றாண்டில், ரம் பொதுவாக மாலுமிகளால் நாணயத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது. அவ்வளவு பிரபலமான மற்றும் விலை உயர்ந்த பானமாக 18 ஆம் நூற்றாண்டில் ரம் இருந்தது.

ஆரோக்கிய பானம்
1970 ஆம் ஆண்டுக்கு முன்னர், ராயல் கடற்படையில் உள்ளவர்களுக்கு ரம் வழங்கப்பட்டது. ஏனெனில் பயங்கரமான ஸ்கர்வியை எதிர்த்துப் போராடுவதில் ரம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி அவ்வாறு வழங்கப்பட்டது. ஆனால் இயந்திரங்களுடன் பணிபுரியும் போது ரம் அருந்தினால், அது கை நடுக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்த பின்னர், அதை தடை செய்தனர்.

முடி கொட்டுவதைத் தடுக்கும்
1800-களில் பெண்கள் தாங்கள் சந்திக்கும் முடி உதிர்வு பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதிலும், மெலிந்த முடியை அடர்த்தியாக்குவதிலும் ரம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி, ரம்மை தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தனர். வேண்டுமானால் நீங்கள் இதை ஒரு ஹேர் டானிக்காக பயன்படுத்திப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications