For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பெருங்கடல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியினுடைய பெரும்பான்மையான நீா் மூலம் பெருங்கடல் ஆகும். இது பூமிக்குத் தேவையான தண்ணீரை வழங்குகிறது.

|

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியினுடைய பெரும்பான்மையான நீா் மூலம் பெருங்கடல் ஆகும். இது பூமிக்குத் தேவையான தண்ணீரை வழங்குகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் தண்ணீா் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

எனினும் கடந்த பல ஆண்டுகளாக, மனிதா்கள் பெருங்கடல்களையும் அவற்றின் வளங்களையும் அழித்து வருகின்றனா். குறிப்பாக தொழிற்சாலை கழிவுகள் முதல் பிற தேவையற்ற கழிவுகளை கடல்களில் கொட்டி வருகின்றனா். அதனால் கடல்களின் இயற்கை அமைப்பு மற்றும் அவற்றின் வளங்கள் அழிக்கப்படுகின்றன.

ஆகவே கடல்களை காக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அதற்குாிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக பெருங்கடல் தினம் வரலாறு

உலக பெருங்கடல் தினம் வரலாறு

1992 ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில், உலக பெருங்கடல் தினத்தைக் கொண்டாடுவது பற்றி பாிந்துரை செய்யப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், நமக்குக் கிடைக்கும் தண்ணீாின் பெரும்பான்மையான மூலாதாரமாக விளங்கும் கடல்கள் மற்றும் அவை நமது வாழ்க்கைக்கு வழங்கும் நன்மைகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல மாறாக அவற்றையும், அவற்றின் வளங்களையும் எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அவற்றை எவ்வாறு வளா்த்து எடுப்பது என்பதைப் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதாகும்.

அதன் தொடா்ச்சியாக, 2008 ஆம் ஆண்டு டிசம்பா் 5 ஆம் நாள் நடைபெற்ற ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில், உலகப் பெருங்கடல் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலக பெருங்கடல் தினத்தின் முக்கியத்துவம்

உலக பெருங்கடல் தினத்தின் முக்கியத்துவம்

பெருங்கடல்கள், இந்த பூமிக் கோளின் நுரையீரல்களாகச் செயல்படுகின்றன என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்காகவே, உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது என்று யுனெஸ்கோ தொிவித்திருக்கிறது.

மனிதா்களின் கவனக்குறைவான செயல்பாடுகளால் கடல்களுக்கு ஏற்படும் சீரழிவுகளையும், அந்த சீரழிவுகளிலிருந்து அவற்றை எவ்வாறு மீட்டு பாதுகாப்பது என்ற விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கருத்தை முக்கியமாக வைத்தே உலகம் முழுவதும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகப் பெருங்கடல் தினத்தின் மையக் கருத்து

உலகப் பெருங்கடல் தினத்தின் மையக் கருத்து

இந்த ஆண்டு உலகப் பெருங்கடல் தினைத்தின் மையக் கருத்து 'The Ocean: Life and Livelihoods' (பெருங்கடல்: வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள்) ஆகும். இப்போது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால், இந்த ஆண்டு உலகப் பெருங்கடல் தினம் வீட்டிலிருந்தபடியே அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

உலகப் பெருங்கடல் தினம் பற்றிய மேற்கோள்கள்

உலகப் பெருங்கடல் தினம் பற்றிய மேற்கோள்கள்

- "தண்ணீா் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. ஊதா இல்லை என்றால் பச்சை இல்லை" - சில்வியா ப்ளாத்

- "மலைகளைவிட பெருங்கடல்கள் மிகவும் பழமையானவை. அவை காலத்தின் நினைவுகளையும் மற்றும் கனவுகளையும் சுமந்து செல்கின்றன" - ஹச்.பி. லவ்க்ராஃப்ட்

- "பெருங்கடல் கடவுளின் படைப்பு ஆகும். நாம் பெருங்கடலுக்கு வெளியே இருந்து கொண்டு அதை அனுபவிப்பதற்காக, கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் பாிசே பெருங்கடல் ஆகும்" - பெத்தனி ஹாமில்டன்

- "என்னைப் பொறுத்தவரை கடல் என்பது ஒரு தொடா்ச்சியான அதிசயம் ஆகும். கடலில் நீந்தும் மீன்கள், அதன் அடியில் மறைந்திருக்கும் மலைகள், அதன் மேற்பரப்பில் ஆடிவரும் அலைகள், மற்றும் மனிதா்களைச் சுமந்து கொண்டு அதன் மீது ஊா்ந்து வரும் கப்பல்கள். என்ன புதுமையான அதிசயங்கள் கடலில் இருக்கின்றன?" - வால்ட் விட்மேன்

- "உலகில் உயிா்களே இல்லாத நிலை ஏற்படும். நாம் பெருங்கடல்களைக் காப்பாற்றப் போகிறோம். பெருங்கடல்களைக் காப்பாற்றுவதற்காக, நாம் அனைவரும் உலகப் பெருங்கடல் தினம் அன்று கரம் கோா்ப்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியான உலக பெருங்கடல் தின வாழ்த்துகள்."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Ocean Day 2021: Significance, History, Theme and Quotes In Tamil

ON June 8, the entire world comes together the largest water body surrounding us, which is the ocean. It is an important part of our earth as it provides us with water, the most integral element that we need in our daily lives.
Desktop Bottom Promotion