For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மனநல தினம் 2019: மனநல பாதிப்புக்குக் காரணமான கிரகங்கள் - பரிகாரங்கள்

|

வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மன நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக முழுவதிலும் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மனநலத்துக்கு ஆதரவாக முயற்சிகளை ஒன்று திரட்டுவதும் இதன் நோக்கம் ஆகும். உலக மனநல தினமான இன்று மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்கும் மன நலத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் மனநலத்தை பாதிக்கும் கிரகங்கள் எவை அதற்கு பரிகாரங்கள் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது, ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது, சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது, ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும், ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும், உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும் .

World Mental Health Day

சந்திரனுக்கும் மனநலனுக்கும் நிறைய தொடர்பு உண்டு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மனநோயாளிகளின் மனநிலை பாதிக்கப்படும்.

பொதுவாக முழு நிலவு அன்று மனநோயளிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள். சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள் ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்,சந்திரன் புத்தி, சனி புத்தி, ராகு தசாபுத்தி காலங்களில் சந்திரன் கேது புத்தி காலங்கள்,சூரியன் புத்தி ராகுபுத்தி கேது தசா புத்தி காலங்களில் மனநிலையில் அதிர்வலைகள் உருவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநல பாதிப்புக்குக் காரணம்

மனநல பாதிப்புக்குக் காரணம்

இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைய தலைமுறையினர்தான். பள்ளி மாணவர்களுக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது. அதே போல வயதானவர்களும் மனநலம் பாதிக்கப்படுகின்றனர். தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன.

MOST READ: காபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா?... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா?

அதிக வேலை

அதிக வேலை

தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம். போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம். சமூக வலை தளங்கள் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குறியதாக உள்ளது. மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, மரபியல் பிறழ்ச்சிகள்,மூளைக்காயம், குறைபாடு மது, போதைப் பழக்கம்,தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு மனநல பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக சந்திரனுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சி கொடுப்பவர் சந்திரன். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.

மறையும் சந்திரன்

மறையும் சந்திரன்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும்.

பலமிழந்த சந்திரன்

பலமிழந்த சந்திரன்

சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும். பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.

MOST READ: நீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா? இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...

கிரகங்கள் கூட்டணி

கிரகங்கள் கூட்டணி

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும். லக்னம் மற்றும் லக்னாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களின் தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது மன நலத்தை பாதிக்கும்.

சனியோடு சந்திரன்

சனியோடு சந்திரன்

ஒருவருடைய ஜாதகத்தில் பக்‌ஷ பலமற்ற சந்திரன் லக்னத்திற்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய வீடுகளில் நிற்பது மனநல பாதிப்பை ஏற்படுத்தும். லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது மனநலத்தை பாதிக்கும். சந்திரனும் புதனும் ஆறு எட்டு 12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களுடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது மன நல பாதிப்பை ஏற்படுத்தும்.

மனநிலை பாதிப்பு

மனநிலை பாதிப்பு

ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலிதனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலிதனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது மனநலத்தை பாதிக்கும்.

சந்திரன் நீசம்

சந்திரன் நீசம்

சந்திரன் விருச்சிக ராசி மற்றும் கால புருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி ஆறு, எட்டு, பனிரெண்டு அதிபதிகளாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது. சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு வீடுகளில் நிற்பது மனநல பாதிப்பை ஏற்படுத்தும்.

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம்

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம்பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.

MOST READ: காபி குடிச்ச கறை பல்லுல இருக்கா?... அத எப்படி சரி பண்றது?...

சூரியன் ராகு கூட்டணி

சூரியன் ராகு கூட்டணி

ஆத்ம காரகனாகிய சூரியன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு வீடுகளில் நிற்பது அல்லது ஜனன ஜாதக ஆறு, எட்டு, பனிரெண்டு வீடுகளில் நிற்பது மனநல பாதிப்பை ஏற்படுத்தும். கோப உணர்ச்சியை தூண்டும் கிரகங்களான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது மனநலத்தை பாதிக்கும்.

தற்கொலை மரணங்கள்

தற்கொலை மரணங்கள்

மனசிதைவு தற்கொலையை தூண்டுகிறது. உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 30 வயதிற்குட்பட்ட இளம் வயதினரே தற்கொலை முடிவை எடுப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கௌரவக் குறைபாடு ஏற்படுகிறது.

கேது

கேது

கேது உடன் சனி, செவ்வாய் உள்ளிட்ட பாவ கிரகங்கள் கூடினாலும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படும். சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். லக்னத்திற்கு நான்கில் சனி நின்றால் எப்போதும் மனகவலையுடன் இருப்பார்கள்.

பரிகாரங்கள் என்ன

பரிகாரங்கள் என்ன

பித்ரு வழிபாடு முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியம். முன்னோர்களை மறந்தவர்களுக்கு புத்திசுவாதினமாக குழந்தைகள் பிறப்பார்கள். பித்ரு தோஷம் பூர்வ புண்ணியத்தில் பாப கிரகங்களை நிற்க வைக்கும். எனவேதான் பித்ரு வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். பிரத்யங்கிரா தேவியை வழிபட மனநல பாதிப்புகள் குறையும். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய ராகு கேது பரிகார தலங்களில் சென்று வழிபடலாம்.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: தனுசு லக்னத்திற்கு பாக்யங்களை அள்ளித் தரும் ஜென்மகுரு

மனதை ஒருமுகப்படுத்துங்கள்

மனதை ஒருமுகப்படுத்துங்கள்

கும்பகோணம் நாச்சியார் கோவிலை அடுத்துள்ள திருநாறையுரில் மாந்தியோடு சேர்ந்து அருள் புரியும் குடும்ப சனி பகவானை வணங்கலாம். திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க ஸ்வாமிகோயிலில் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட மனோ பலம் அதிகரிக்கும். திருக்கடையூர் அபிராமி கோவில் சென்று வழிபடலாம். சந்திர ஸ்தலங்களான குணசிலம், திருப்பதி, திங்களூர் போன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். காமாக்ஷி அம்மனை வழிபடலாம். சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ராநாமம் படிக்கலாம். அபிராமி அந்தாதி படிக்கலாம். வீட்டில் மகாமேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு வைத்து வணங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Mental Health Day 2019: Astrological Remedies For Mental Illness

people from ancient period believed that the phases of the moon and madness are interlinked. Suicide is a global public health problem that deserves the attention of all the actors in the field of mental health, including scientific and professional organizations, organizations for mental health users and their families, and universities.
Story first published: Thursday, October 10, 2019, 13:32 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more