Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 5 ராசி பெண்களுக்கு எதிலும் தோல்வியே கிடையாதாம்... இவங்ககூட எப்பவும் போட்டி போடாதீங்க...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணம் உண்டு. அதன்படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் எப்போதும் வெற்றியின் முகவரியாக இருப்பார்கள்.
நமது சமூகத்தில் பெண்ணாக இருப்பதே மிகவும் கடினமான ஒன்றாக மாறிவருகிறது. ஏனெனில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், குற்றவாளிகள் எளிதில் தப்பிப்பதற்கான வழிமுறைகளும் நம்மைச் சுற்றி அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு சமீபத்திய பல நிகழ்வுகளே சான்றாக உள்ளது. இருப்பினும், பல தடைகளையும் தாண்டி சமூகத்தில் வெற்றிபெறும் பெண்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணம் உண்டு. அதன்படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் எப்போதும் வெற்றியின் முகவரியாக இருப்பார்கள். அவர்களிடம் போட்டியிட்டு வெல்வது என்பது அசாத்தியமானதாகவே கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் வெல்ல முடியாதவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் ஒரு இடத்தில் நுழையும்போது அந்த அறையில் இருக்கும் அனைவரின் கவனமும் அவர்களின் மீதே இருக்கும். சிம்ம ராசி பெண்கள் மிகவும் உறுதியான நபர்களில் ஒருவர், அவர்கள் எதையாவது முடிவெடுத்துவிட்டால், அது முடிந்துவிட்டது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இந்த ராசிகளின் பெண்கள் வலிமையான தலைவர்களாக வெளிப்படுவார்கள்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் வலிமையானவர்கள், லட்சியம் மற்றும் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்களின் மனது நெருப்பு மற்றும் சக்தியால் நிரம்பியுள்ளது. மேஷம் மிகவும் சக்திவாய்ந்த ராசி அறிகுறிகளில் ஒன்றாகும். அவர்களின் மனவலிமை அவர்களை நினைத்ததை அடைய உதவுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிப் பெண்கள் வலிமையானவர்கள், சுதந்திரமானவர்கள், வாழ்க்கையில் எந்தச் சூழலையும் பொருட்படுத்தாமல் வெற்றி பெறுவார்கள். அவர்கள் புத்திசாலி, பிடிவாதமான மற்றும் வலிமையான பெண்கள். ரிஷபம் ராசிப் பெண்கள் எந்தப் பணியையும் பாதியில் விடமாட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை வேறெதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள்.

மகரம்
மகர ராசி பெண்கள் பயமற்றவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதில் சிறந்ததைக் கொடுப்பார்கள். அவர்களின் ஆர்வமும், எதார்த்த குணமும் வெற்றியை அவர்களை நோக்கி ஈர்க்கிறது.

தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்த பெண்கள் உணர்ச்சிகள் மற்றும் பச்சாதாபம் நிறைந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர், இது அனைவரின் மனதிலும் அவர்களை பற்றிய கண்ணோட்டத்தை உயர்த்த உதவுகிறது. அவர்களின் நேர்மறை குணமே அவர்களின் பலமாகும்.



Click it and Unblock the Notifications