For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் 2020: கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா?

ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி நடத்துவது பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சியாகும். இது ஒரு வகை படகு போட்டியாகும். கேரளாவில் நடைபெறும் ஒரு சுவாரஸ்யமான ஒரு போட்டியாகும்.

|

ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி நடத்துவது பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சியாகும். இது ஒரு வகை படகு போட்டியாகும். கேரளாவில் நடைபெறும் ஒரு சுவாரஸ்யமான ஒரு போட்டியாகும். சுற்றுலா செல்பவர்களைக் கவரும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த போட்டி அமைகிறது. இந்த போட்டியைக் காண்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கு செல்கின்றனர்.

Why Vallamkali (Boat Race) Is Practiced In Kerala During Onam?

நீண்ட காலமாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகையில் இந்த போட்டி கேரளாவில் நடைபெறுகிறது. நமது நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்த போட்டியை விரும்பி, இந்த போட்டியின் வெற்றியாளருக்கு கோப்பையை பரிசாக அறிவித்தார். இதனால் இந்த படகு போட்டி மேலும் முக்கியத்துவம் பெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படகு போட்டிக்கு பின்னால் இருக்கும் கதை

படகு போட்டிக்கு பின்னால் இருக்கும் கதை

இந்த அழகான நிகழ்வுக்கு பின் ஒரு கதை உள்ளது. தலைவர் காட்டூர் பத்தாத்திரி நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த ஒரு பிராமணர். இவர் தினமும் இறைவனை பிரார்த்தனை செய்வதை வழக்காகக் கொண்டு வந்தார். தினமும் இறைவனுக்கு உணவுகள் சமைத்து பூஜைக்கு பின் ஒரு ஏழைக்கு அதனை தானம் செய்வர். ஒரு நாள் பூஜை முடிந்து நீண்ட நேரம் ஆன பின்னும் எந்த ஒரு ஏழையும் வந்து உணவை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர் தொடர்ந்து பகவான் கிருஷ்ணரை பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனைக்கு பின் கண்களை திறந்தவருக்கு ஒரு ஆச்சர்யம்.

கிழிந்த உடையுடன் ஒரு சிறுவன்

கிழிந்த உடையுடன் ஒரு சிறுவன்

அவர் கண் முன்னே ஒரு சிறுவன் கிழிந்த ஆடையுடன் நின்று கொண்டிருந்தான். இதனைக் கண்டு மனம் உருகினார் நம்பூதிரி. இந்த சிறுவனை அழைத்து குளிக்க வைத்து, புதிய ஆடைகள் அணிவித்து, மனம் மகிழ அவனுக்கு உணவுகளைக் கொடுத்து உட்கொள்ளச் செய்தார். உணவை உட்கொண்டவுடன் அந்த சிறுவன் மறைந்துவிட்டான். பிராமணர் இதனைக் கண்டதும் மிகவும் ஆச்சர்யப்பட்டார். இதனை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த சிறுவனை அவர் தேட ஆரம்பித்தார்.

ஆறன்முளா ஆலயம்

ஆறன்முளா ஆலயம்

மறுபடி அந்த சிறுவனை அவர் ஆறன்முளா ஆலயத்தில் மீண்டும் கண்டார். மீண்டும் ஆச்சர்யப்படும் வகையில் அந்த சிறுவன் மீண்டும் மறைந்துவிட்டான். அப்போது அந்த பிராமணருக்கு ஒன்று புரிந்தது. இவன் வெறும் சிறுவன் அல்ல, அவர் வழிபட்டு வந்த கிருஷ்ணர் என்று உணர்ந்தார்.

பாம்பு படகு

பாம்பு படகு

இந்த நாளின் நினைவாக ஓணம் திருவிழாவின் போது அந்த ஆலயத்திற்கு உணவு கொண்டு வர தொடங்கினார். கொள்ளையர்களிடமிருந்து உணவை பாதுகாப்பதற்காக உணவை கொண்டு வரும் போது பாம்பு படகை தன்னுடன் கொண்டு வந்தார். இந்த பாரம்பரியம் பிரபலமடைந்து பாம்பு படகின் எண்ணிக்கை அதிகரித்தது. இது ஒரு அழகிய பாம்பு படகு விழாவாக, ஒரு போட்டியாக மாறியது.

வள்ளம்களி படகு

வள்ளம்களி படகு

வள்ளம்களி போட்டியில் பயன்படுத்தப்படும் படகுகள் சாதாரண படகுகள் போல் அல்ல. இந்த படகுகளுக்கு குறிப்பிட்ட அளவீடு உள்ளன. இதன் நீளம் 100மீ மற்றும் 150 பேர் ஒவ்வொரு படகில் அமர முடியும். பலா, தேக்கு போன்ற மரங்களைக் கொண்டு இந்த படகு வடிவமைக்கப்படுகிறது. இந்த படகின் ஓரப்பகுதி சுருண்டு பாம்பு போல் காட்சியளிக்கிறது. இதன் வடிவம் காரணமாக இதனை பாம்பு படகு என்று கூறுகின்றனர்.

பெண்கள் தொடக்கூடாது, செருப்பு அணியக்கூடாது

பெண்கள் தொடக்கூடாது, செருப்பு அணியக்கூடாது

திறமை வாய்ந்த கலைஞர்கள் கொண்டு இந்த படகு தயார் செய்யப்படுகின்றன. கலைஞர்கள் மிகவும் பொறுமையாக இருந்து, கடுமையாக வேலை செய்து இந்த படகை தயாரிக்கின்றனர் மற்றும் இதற்கான வேலைப்பாடுகளை செய்கின்றனர். இந்த படகை இறைவனுக்கு நிகராக கேரள மக்கள் பாவிக்கின்றனர். இந்த படகுடன் அவர்களுக்கு உணர்வு ரீதியான பிணைப்பு இருப்பதை உணர்கின்றனர். பெண்கள் இந்த படகைத் தொட அனுமதியில்லை. ஆண்கள் இந்த படகைத் தொடலாம். ஆனால் ஆண்கள் செருப்பில்லாமல் இந்த படகில் ஏறுகின்றனர் .

அழகிய விழா

அழகிய விழா

இந்த விழா செம்மையாக நடைபெற சில நாட்கள் முன்னதாகவே ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. போட்டிக்கு முன்னதாக எல்லா படகுகளும் வரிசையில் நிற்க வைக்கப்படுகின்றன பகவான் விஷ்ணு மற்றும் அரசன் மகாபலியை வணங்கி படகு வீரர்கள் போட்டியை துவங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு இறைவன் மற்றும் அரசனின் ஆசி கிடைக்கிறது. பூக்கள் தூவி விழா தொடங்குகிறது.

வள்ளம்களி போட்டியை கண்டுகளிக்க பலரும் கேரளா நோக்கி வருகின்றனர். இது ஒரு அழகிய விழா மட்டும் இல்லாமல் அந்த நிகழ்வுடன் தொடர்புடைய புராண கதையை நினைவுகூறவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Vallamkali (Boat Race) Is Practiced In Kerala During Onam?

Did you know why vallamkali or boat race is practiced in kerala during onam? Read on...
Desktop Bottom Promotion