For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டை தலையைணைக்கு அடியில் ஏன் வைத்து தூங்குகிறார்கள்? அப்படி பண்ணா என்ன நடக்கும் தெரியுமா?

தலையணைக்கு அடியில் பூண்டுப் பற்களை வைப்பது வெறும் கட்டுக்கதை அல்ல என்று கூறப்படுகிறது. இன்னும் பலர் பூண்டுப் பற்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு உறங்குகிறார்கள்

|

நாம் சிறிய வயதில் இருக்கும்போது, சில சம்பிரதாயங்களை ஏன்? எதற்கு? என்று கேட்காமல் பின்பற்றி வந்திருக்கிறோம். அது மூட நம்பிக்கையா? இல்லை அறிவியல் ஆதாரத்தின்படி உண்மையா என்று யோசிப்பதில்லை. ஆனால், நாம் வளர வளர பல விஷயங்களை கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறோம். அந்த வகையில், படுக்கையில் பூண்டு வைத்திருப்பது காட்டேரிகளை பயமுறுத்தும் மற்றும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அல்லது தேவதைகள் பூண்டுக்கு ஈடாக சிறிது பணத்தை நமக்கு கொடுக்கும் என்ற மழலையர் பள்ளி கதைகளை நாம் சிறிய வயதில் கேள்வி பட்டிருப்போம்.

why-traditionally-some-people-keep-garlic-under-their-pillow-in-tamil

ஆனால், தலையணை கீழ் பூண்டு வைத்து தூங்குவது நல்லது என்று கூறப்படுவதற்கு பின், ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா? இல்லை அமானுஷ்ய காரணம் ஏதும் உள்ளதா? என்பதை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

தலையணைக்கு அடியில் பூண்டுப் பற்களை வைப்பது வெறும் கட்டுக்கதை அல்ல என்று கூறப்படுகிறது. இன்னும் பலர் பூண்டுப் பற்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு உறங்குகிறார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, எதையாவது பார்த்து பயந்திருக்கும்போது தலையணைக்கு அடியில் பூண்டை நம் பாட்டி அல்லது அம்மா வைப்பார்கள். எனவே, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? தேவதை காட்மதர் அல்லது காட்டேரிகள் அல்லது தலையணையின் கீழ் ஒரு பூண்டு நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் பாரம்பரியத்தை பற்றி இங்கு காணலாம்.

அது உண்மையில் வேலை செய்கிறது?

அது உண்மையில் வேலை செய்கிறது?

பூண்டு பல வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஒரு சக்தியாகும். மேலும் பூண்டை உட்கொள்வதால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பல ஆண்டுகளாக நமக்கு கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த நம்பிக்கைகளில் பெரும்பாலானவை அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த பழமையான நம்பிக்கையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த பாரம்பரிய நடைமுறைக்கு ஏதேனும் அறிவியல் ஆதரவு விளக்கம் உள்ளதா?

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

இந்த மருந்து பூண்டின் கடுமையான மற்றும் வலுவான வாசனையுடன் தொடர்புடையது என்பதால் இது நிச்சயமாக உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இது உங்கள் தூக்கத்திற்கு அதிசயங்களைச் செய்யும். கொசுக்கள், பூச்சிகளை விரட்டும் மற்றும் தூக்கமின்மையை சரிசெய்ய உதவும். பழங்கால வைத்தியத்தின் படி, தலையணையின் கீழ் ஒரு பூண்டு பற்களை வைத்திருப்பது தூக்கத்தை மேம்படுத்துவதற்கும் தூக்கக் கோளாறு பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உதவும் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இதற்கான அறிவியல் விளக்கம் பூண்டில் கந்தகத்தின் இருப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கடுமையான வாசனைக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த வலுவான வாசனை தூக்கத்தைத் தூண்டுகிறது மற்றும் அமைதியான விளைவை உங்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.

வேறு என்ன உள்ளது?

வேறு என்ன உள்ளது?

இது தவிர, தலையணைக்கு அடியில் கிராம்பு மொட்டு வைத்திருப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த வலுவான வாசனையுடன் தூங்குவதை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றால், பூண்டுடன் தயாரிக்கப்பட்ட இரவு பானம் உங்கள் ஒழுங்கற்ற தூக்க முறைகளை சரிசெய்ய உதவும்.

பானத்தை எப்படி செய்வது?

பானத்தை எப்படி செய்வது?

இந்த எளிய உறங்கும் பானத்தை தயாரிக்க, ஒரு கடாயில் ஒரு பூண்டு பல்லை நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர், ஒரு கிளாஸ் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். இனிப்பு மற்றும் காரமான பொருட்களைக் கொண்டும் இந்த பானத்தை நீங்கள் செய்யலாம். பானம் கொதித்ததும், தீயை அணைத்து, ஒரு கண்ணாடி கிளாஸில் மாற்றவும். பின்னர், 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும். நன்றாகக் கலந்து குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ குடித்த பின்பு நன்றாக தூங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Traditionally Some People Keep Garlic Under Their Pillow in tamil

Why Traditionally Some People Keep Garlic Under Their Pillow in tamil
Story first published: Saturday, September 10, 2022, 13:44 [IST]
Desktop Bottom Promotion