For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரட்டாசியில் திருமணம், கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதேபோல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள். பெருமாள

|

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

Purattasi

புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது. வாஸ்து பகவான் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும். அதேபோல இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Marriages are not Performed In the Month of Purattasi - Reasons

Generally, during the month of Purattasi and also during Margazhi marriage related activities are avoided. During Purattasi, pitru paksham Mahalayam is covered for a fortnight.we don't do Grahapravesam house warming ceremony and go to new house in the above months.at the same time, if other functions at home like, Birthdays Seemandham, can be celebrated as these cannot be postponed .
Story first published: Friday, September 20, 2019, 16:05 [IST]
Desktop Bottom Promotion