For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தி அன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது? ஒருவேளை பார்த்துவிட்டால் என்ன செய்யணும்?

விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடாத ஓர் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்று யோசிக்கிறீர்களா? விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பது கெட்டது என்று கூறப்படுகிறது.

|

முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி அல்லது பிள்ளையார் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து, விநாயகரை அழகாக அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்த உணவுகளை செய்து படைத்து வணங்குவது வழக்கம்.

Why Is Moon Sighting Prohibited On Ganesh Chaturthi?

ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடாத ஓர் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்று யோசிக்கிறீர்களா? விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பது கெட்டது என்று கூறப்படுகிறது. ஏன் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது? அப்படி பார்த்ததால் என்ன நடக்கும், தெரியாமல் பார்த்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விநாயகர் சதுர்த்தி அன்று ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது?

விநாயகர் சதுர்த்தி அன்று ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது?

புராணத்தின் படி, ஒரு நாள் இரவு விநாயக பெருமான் தனது வாகனமான எலியின் மீது அமர்ந்து தனது இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் சந்திர தேவன் தவிர வேறு யாரும் இல்லை. விநாயகப் பெருமானின் எடையைச் சுமந்து எலி படிப்படியாக முன்னேறி சென்று கொண்டிருந்த போது, ஒரு பாம்பைக் கண்டு பயந்து வேகமாக ஓடியது. பாம்பிடம் இருந்து தப்பிக்க எலி விநாயக பெருமானை தரையில் இறக்கி விட்டது. அப்போது விநாயக பெருமான் தனது பெரிய வயிற்றை நிர்வகிக்க முடியாமல் போராடுவதைக் கண்டு சந்திர தேவன் சிரித்தார் மற்றும் அவரது தோற்றத்தைப் பார்த்து கிண்டல் செய்தார்.

விநாயகரின் சாபம்

விநாயகரின் சாபம்

சந்திரன் தனது தோற்றத்தில் பெருமைப்பட்டு விநாயகரை கேலி செய்ததால், விநாயகர் கோபமடைந்து இன்று முதல் நீங்கள் கருப்பாக இருப்பீர்கள் என்று சபித்தார். பிறகு சந்திர தேவன் தனது தவறை உணர்ந்து, விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் விநாயகர் சந்திர தேவன் மீது பரிதாபப்பட்டு, தான் கூறிய சாபத்தை மீட்டெடுக்க முடியாது. ஆனால் சூரியனின் கதிர்கள் தம் மீது விழும் போது, அவரது ஒளி மற்றும் அழகு மீண்டும் வந்துவிடும் என்று கூறினார். அப்போது இருந்து விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நாளில் யாராவது சந்திரனைக் கண்டால், அவர் பாவத்தில் குற்றவாளியாவார்கள் என்று கூறப்படுகிறது.

கதையின் கருத்து

கதையின் கருத்து

ஆணவமானது ஒருவரை மற்றவர்களிடம் இருந்து விலக்கும். மேலும் இது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும். எனவே இதிலிருந்து ஒருவர் விடுபட வேண்டும். சந்திரன் இந்த விஷயத்தில் ஆணவத்தின் அடையாளமாக இருப்பதால் தான், இந்நாளில் அவரைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரைப் பார்த்தால் என்ன செய்வது?

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரைப் பார்த்தால் என்ன செய்வது?

ஒருவர் விநாயகர் சதுர்த்தி அன்று தற்செயலாக விநாயகரைப் பார்த்தால் பின்வரும் மந்திரத்தைக் கூற வேண்டும்.

சிம்ஹா ப்ரஸேநமாவதீத்ஸிம்ஹோ ஜாம்பவதா ஹதா

ஸுகுமாரகா மரோதிஸ்தவா ஹ்யேஷா ஸ்யமந்தகா॥

இந்த மந்திரத்தைக் கூறி விநாயகப் பெருமானை வழிபட்டு, அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்களிடம் அகங்காரம் சிறிதும் இல்லாவிட்டால், விநாயக பெருமான் உங்களை மன்னித்து மித்ய தோஷத்தில் இருந்து விடுவிப்பார்.

சந்திரனை பார்த்த கிருஷ்ணர்

சந்திரனை பார்த்த கிருஷ்ணர்

ஒருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று பகவான் கிருஷ்ணர் சந்திரனைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து, அவர் சியமந்தகா என்ற விலைமதிப்பற்ற ரத்தினத்தை திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டார். இதிலிருந்து விடுபட, தேவர்ஷி நாரத முனிவர் ஒரு விரதத்தைக் கடைப்பிடித்து விநாயகப் பெருமானை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Moon Sighting Prohibited On Ganesh Chaturthi?

The sighting of the Moon is prohibited on Ganesh Chaturthi. Read on to know the story related to this tradition of not seeing the Moon on Ganesh Chaturthi and what you should do, if you accidentally see it.
Desktop Bottom Promotion