For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா?

சிவனும், விஷ்ணுவும் மனிதர்களை பாதுகாக்கும் பொதுவான கடவுள்களாக இருந்தாலும் அவர்களை வழிபடும் மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பிரிவினை ஏற்படுத்தித்தான் வாழ்ந்தும் அவர்களை வழிபட்டும் கொண்டிருக்கிறார்கள்.

|

Recommended Video

Why is Lord Shiva easier to please than Lord Vishnu? : சிவன் & விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிது?

இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்கள்தான் அனைத்து உயிர்களின் வாழ்க்கை சுழற்சிக்கும் அடிப்படையாக விளங்குகிறார்கள். இவர்களில் பிரம்மாவிற்கு பரவலாக கோவில் இல்லை என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் சிவபெருமானுக்கும், விஷ்ணுவிற்கும் திரும்பும் திசைகளில் எல்லாம் கோவில் இருக்கிறது.

Is it easier to please Lord Shiva than Vishnu

சிவனும், விஷ்ணுவும் மனிதர்களை பாதுகாக்கும் பொதுவான கடவுள்களாக இருந்தாலும் அவர்களை வழிபடும் மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பிரிவினை ஏற்படுத்தித்தான் வாழ்ந்தும் அவர்களை வழிபட்டும் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் யாரை வழிபடுவது எளிமையானது என்பது இந்த இரண்டு பிரிவையும் சாராதவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவன் மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் விஷ்ணு

பொதுவாக விஷ்ணுவை விட சிவனை மகிழ்விப்பது எளிது என்ற கருத்து நிலவுகிறது, அதற்கு காரணம் தர்மத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்லாத தங்கள் நோக்கங்களை நோக்கி பக்தியுள்ளவர்களாக இருக்கும் வரை தங்களுக்கு வேண்டியதைப் பெற முடியும் என்று சைவர்கள் நம்பினர். அதேபோல விஷ்ணுவின் அருளை பெற இந்த உலகின் இன்பங்களில் இருந்தும், பொருள்சார் உடமைகளில் இருந்தும் விலகி இருந்து விஷ்ணுவை வழிபடுவது மோட்சத்தை வழங்கும் என்று வைணவர்கள் நம்பினார்கள்.

பரந்த வழி

பரந்த வழி

இதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் நீங்கள் இந்து மதத்தின் இருபெரும் சிந்தனைகளான சைவம் மற்றும் வைணவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சைவம்

சைவம்

இந்து மதத்தின் இந்த பிரிவு சிவபெருமானை படைப்பாளராகவும், அழிப்பவராகவும் உருவகிக்கிறது . இந்த சிந்தனை கடவுளுக்கு ஒரு வடிவத்தைக் கூறுகிறது, இது கடவுளின் பல்வேறு பண்புகளை விளக்குகிறது.

கடவுளின் சில பண்புகள்

கடவுளின் சில பண்புகள்

அவரது தலையில் பிறை நிலவு - அவர் மனதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. உடல் முழுவதும் சாம்பல் என்பது மரணத்திற்குப் பிறகு பொருடிக்லின் இருப்பு எவ்வாறு நின்றுவிடுகிறது என்பதைக் குறிக்கிறது. புலியின் தோலில் உட்கார்ந்து இருப்பது அவர் காமத்தை வென்றதைக் குறிக்கிறது. இந்த பண்புக்கூறுகளும், உடலமைப்பும் சிவபெருமானுக்கு உரியதாகும். சிவபெருமானின் செயல்பாடுகள் குறித்து வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல செயல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம் தெரியுமா?

அழிப்பவர்

அழிப்பவர்

சிவன் அசுரர்களை அழித்தவர், சக்திவாய்ந்த விஷத்தை குடித்தவர். ஆனால் அதேசமயம் தீவிரமான தவம் மூலம் அவரை மகிழ்விக்கலாம். அவரை மகிழ்வித்துவிட்டால் எவ்வளவு ஆபத்தான வரத்தையம் அவரிடம் இருந்து பெறலாம் என்று புராணங்கள் கூறுகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பஸ்மாசுரன் ஆவான். சிவபெருமான் வழங்கிய வரம் அவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது.

சைவர்களின் நம்பிக்கை

சைவர்களின் நம்பிக்கை

சைவர்கள் சிவபெருமானை போலவே எதிரிகளிடம் கூட இணக்கமாக வாழ முடியும் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இது சிவபெருமானின் வருகை மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் சிவபெருமானை வழிபடுவது எளிதானது எனவும் அவரின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையை எட்ட முடியும் என்றும் நம்பினர்.

வைணவம்

வைணவம்

வைணவர்களை பொறுத்தவரை விஷ்ணுவே மிக உயர்ந்த கடவுளாக கருதப்படுகிறார். சிவனைப் போலவே விஷ்ணுவின் உருவமும் வைணவர்களால் உருவகப்படுத்தப்படுகிறது. அதன்படி விஷ்ணு வைகுண்டத்தில் சேஷ நாகத்தின் மீது தனது மனைவியான லட்சுமியுடன் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அவரின் பாதத்திற்கு அருகே அவரின் தொப்புளில் இருந்து செல்லும் தாமரையில் பிரம்மா அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரின் ஒரு கையில் சுதர்சன சக்கரம் இருக்கும்.

வழிபாட்டு முறைகள்

வழிபாட்டு முறைகள்

விஷ்ணுவின் அருளைப் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதேசமயம் மிகவும் புத்திசாலியான கடவுளாக இவர் உருவகப்படுத்தப்படுகிறார். இதற்கு பல புராணக்கதைகள் சான்றாக உள்ளது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று விஷ்ணு தன் அவதாரங்களின் மூலம் கூறுகிறார். இந்த உலக ஆசைகளில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் பக்தர்களை விடுவிப்பதற்காக உங்களைத் தடுத்து நிறுத்தும் கவனச்சிதறல்களைத் தடுப்பதற்காக கடவுள் உங்களிடமிருந்து எல்லா பொருட்களையும் பறிக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வைணவம் அமைந்துள்ளது.

MOST READ: காதலில் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் இல்லாமல் இருக்க இத பண்ணினாலே போதுமாம் ...!

ஆன்மீக வழி

ஆன்மீக வழி

ஆன்மீகரீதியாக பார்க்கும் போது சிவபெருமானும், விஷ்ணுவும் தனித்தனி கடவுள்கள் அல்ல. அவர்கள் இருவரையும் பிரித்து பார்ப்பதோ அல்லது ஒருவரை விட மற்றவர் சிறந்தவர் என்பதோ அறியாமையாகும். இருவரில் யாரை வழிபட்டாலும் நீங்கள் இறுதியில் சென்று சேரும் இடம் என்பது ஒன்றுதான். கடவுளின் கிருபையை நம்மீது ஈர்க்கக்கூடிய ஒரே கருவி பக்தி வடிவத்தில் உள்ள அன்பு. அதற்காக சிவபெருமான் மற்றும் விஷ்ணு சமமாக காத்தருகின்றனர். அவர்களில் எவரிடமும் உங்கள் பக்தியில் நீங்கள் உண்மையாக இருந்தால் அவர்கள் உங்களை நிச்சயம் பாதுகாப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is Lord Shiva easier to please than Lord Vishnu?

is it easier to please Lord Shiva than Vishnu.
Story first published: Tuesday, September 24, 2019, 11:31 [IST]
Desktop Bottom Promotion