For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவான் எள் எண்ணெயை விரும்புவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

சனிபகவானுக்கு எள் எண்ணெய் வைத்து வழிபடுவது காலகாலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு முறையாகும். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் பலருக்கும் தெரியாது.

|

சனிகிரகத்தை ஆளும் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் மிகவும் முக்கியமான புனிதமான கடவுளாக சனிபகவான் இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் இடத்தைப் பொறுத்ததுதான் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், முன்ன்னேற்றங்களும் இருக்கும். சனிபகவான் காகத்தை தனது வாகனமாக கொண்டவர். இவர் சூரியபகவானின் மகன் ஆவார்.

Why do people offer mustard oil to Lord Shani Dev

சனிபகவானுக்கு எள் எண்ணெய் வைத்து வழிபடுவது காலகாலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு முறையாகும். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் பலருக்கும் தெரியாது. எள் எண்ணெயை சனிபகவான் விரும்புவதற்கும், இராமாயணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் பின்னால் இருக்கும் ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராம பாலம்

இராம பாலம்

இராமர் இராமேஸ்வரத்திருந்து இலங்கைக்கு பாலம் கட்டி தனது வானர சேனையுடன் இலங்கை சென்றடைந்தார். அந்த பாலத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனுமனிடம் ஒப்படைக்கப்பட்டது. அனுமனும் இராமர் வழங்கிய அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சனிபகவானின் சவால்

சனிபகவானின் சவால்

ஒரு நாள் அனுமன் மரத்திற்கு அடியில் அமர்ந்து இராமரை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சனிபகவான் அவரை நெருங்கி " நான்தான் சக்தி வாய்ந்த சனிதேவன், நீ என்னை விட சக்திசாலி என்று கேள்விப்பட்டேன், எனவே எனது வலிமையை உன்னுடன் சண்டையிட்டு சோதிக்க நான் வந்துள்ளேன். எனவே கண்ணை திறந்து என்னுடன் சண்டையிடு " என்று கூறினார்.

அனுமனின் பதில்

அனுமனின் பதில்

கண்களை திறந்த அனுமன் சனிதேவரிடம் " இப்போது நான் என் ஆண்டவரை தியானிக்கிறேன். என் பிரார்த்தனைகளில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம், என்னை தனியாக விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறினார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...!

அனுமனின் கோபம்

அனுமனின் கோபம்

அனுமன் கூறிய பதிலால் சமாதானமடையாத சனிபகவான் சண்டை போடுவதில் பிடிவாதமாய் இருந்தார். எனவே அனுமன் உட்கார்ந்த நிலையிலேயே தனது வாலை நீட்டி சனிபகவானை சுற்றினார். மேலும் அதனை இறுக்கத் தொடங்கினார். சனிபகவான் எவ்வளவோ முயன்றும் அனுமனின் வாலில் இருந்து விடுபட இயலவில்லை. அனுமன் தனது வாலை மேலும் கீழும் ஆட்டி, சனிபகவானை பாலத்தின் மீது இடித்தார். இதனால் சனிபகவானின் உடலில் இரத்தப்போக்கு ஏற்ப்பட்டது.

சனிபகவானின் மன்னிப்பு

சனிபகவானின் மன்னிப்பு

வலியை தாங்கிக் கொள்ள இயலாத சனிபகவான், " தயவுசெய்து என்னை விடுவிக்கவும். இதேபோன்ற தவறை நான் மீண்டும் ஒருபோதும் செய்யமாட்டேன் " என்று வேண்டினார். அதற்கு அனுமன் " இனி தாம் இராம பக்தர்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று வாக்களித்தால் மட்டுமே தங்களை விடுவிப்பேன் " என்று கூறினார். அதீத வலியில் இருந்த சனிபகவான் " நீ சொல்வது போலவே செய்கிறேன், இனி இராம பக்தர்களையும், தங்களுடைய பக்தர்களையும் ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டேன் " என்று வாக்களித்தார்.

சனிபகவான் கேட்ட எண்ணெய்

சனிபகவான் கேட்ட எண்ணெய்

சனிபகவான் விடுதலை அடைந்தவுடன், " எனக்கு கடுமையான வலி உள்ளது. எனவே அதனை போக்க ஏதாவது எண்ணெய் தருகிறீர்களா? " என்று கேட்டார். அதன்பின் அனுமன் ஒரு எண்ணெயை சனிபகவானுக்கு கொடுத்தார், அதனை தேய்த்த பிறகுதான் சனிபகவானின் வலி குணமாகியது.

சனிபகவானும் எண்ணெயும்

சனிபகவானும் எண்ணெயும்

அந்த தருணத்தில் இருந்து சனிபகவானுக்கு எண்ணெய் வைத்து வழிபடுவது வழக்கமாகிவிட்டது. இது அனைத்து வகை வலிகளையும் தணிப்பதன் அடையாளமாக மாறிவிட்டது. அனுமனின் கோபத்தைக் கண்டு சனிபகவான் அஞ்சினார். இதனால் அவர்களின் பக்தர்களை ஒருபோதும் அவர் சோதிக்கவில்லை.

MOST READ: நரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா?

சனிபகவானை கவர்வது எப்படி?

சனிபகவானை கவர்வது எப்படி?

எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை வைத்து வழிபடுவது சனிபகவானை கவர்வதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதனை செய்வதற்கு சிறந்த நாள் சனிக்கிழமைதான், இது சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் நாளாக இருக்கிறது. சனிக்கிழமையில் சூரியன் உதிக்கும் முன் அரசமரத்தை எள் எண்ணெய் மற்றும் எள் விதைகளை வைத்து வழிபடுவது சனிபகவானின் அருளைப் பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do People Offer Mustard Oil To Lord Shani Dev?

Read to know Why do people offer mustard oil to Lord Shani Dev.
Story first published: Friday, October 4, 2019, 11:14 [IST]
Desktop Bottom Promotion