For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முஸ்லீம் மக்கள் ஏன் வெள்ளிக்கிழமையில் மட்டும் சிறப்பு தொழுகை செய்கிறார்கள் தெரியுமா?

முஸ்லீம் மக்கள் தினந்தோறும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள், இருப்பினும் வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் மசூதியில் நண்பகலில் ஒரு சிறப்பு கூட்ட பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

|

முஸ்லீம் மக்கள் தினந்தோறும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள், இருப்பினும் வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் மசூதியில் நண்பகலில் ஒரு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இது ஜுமா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு பிரார்த்தனை ஏன் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது?

why do muslims pray on friday

இதற்கான தெளிவான விளக்கமோ அல்லது பதிலோ இதுவரை கூறப்படவில்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் சாத்தியக்கூறுகள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் இஸ்லாமிய சகோதரர்களின் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

வெள்ளி மற்றும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை இஸ்லாத்தின் மிகப்பெரிய கொள்கைகள் மற்றும் அறிகுறிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்படுவதால், முஸ்லிம்களுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது ஈத் பண்டிகை போல அவர்கள் அனைவரையும் ஒன்று சேர வைக்கிறது. இந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் போது அவர்கள் தங்கள் மதகுருவான இமாம்களிடம் இருந்து பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். அதற்குபின் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையில் ஈடுபடுகிறார்கள்.

ஜமா மஸ்ஜித்தின் உண்மையான பொருள்

ஜமா மஸ்ஜித்தின் உண்மையான பொருள்

டெல்லியின் ஜமா மஸ்ஜித் இந்தியாவின் பழைய டெல்லியின் பிரதான மசூதியாகும். ஜமா மஸ்ஜித் என்ற பெயர், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நண்பகல் முஸ்லிம்களின் சபைத் தொழுகையை குறிக்கிறது. ஜும்மா, இது பொதுவாக ஒரு மசூதியில் செய்யப்படுகிறது, இது "சபை மசூதி" அல்லது "ஜமா மஸ்ஜித்" என்று அழைக்கப்படுகிறது.

இது நல்லிணக்கத்தைப் பற்றியதா?

இது நல்லிணக்கத்தைப் பற்றியதா?

வெள்ளிக்கிழமை தொழுகை என்பது முஸ்லீம் மக்கள் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதிக்க மற்றும் தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. ஒரு முறை ஒன்று சேருவது முஸ்லிம்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானத்தை உருவாக்குகிறது. வெள்ளிக்கிழமை தொழுகை சமத்துவத்தின் நிரூபணம் என்ற தர்க்கமும் நியாயமானதே.

MOST READ: பெண்கள் இந்த விஷயங்களுக்காக ஒருபோதும் ஆண்களிடம் கெஞ்சவே கூடாதாம்...!

வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

முஸ்லீம் மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்வாக வெள்ளிக்கிழமை பிரார்த்தனை இருக்கிறது. இஸ்லாமிய போதனைகளில் இமாமின் பிரசங்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொரு வயது முதிர்ந்த ஆண் முஸ்லிமுக்கும் வெள்ளிக்கிழமை தொழுகை என்பது அவசியமான ஒன்றாகும். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இரண்டு அதான்கள் உள்ளனர். சூரியன் மறையத் தொடங்கும் போது முதல் அதான் ஓதப்படுகிறது, இரண்டாவது இமாம் தனது பிரசங்கத்தை தொடங்குவதற்கு முன் ஓதப்படுகிறது.

ஜும்மா ஏன் முக்கியமானது?

ஜும்மா ஏன் முக்கியமானது?

வாரத்தின் ஏழு நாட்களில், அல்லாஹ்வின் சிறப்பு ஆசீர்வாதம் வழங்கப்படும் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். வெகுமதிகள் அதிகரிக்கும் போது இது முஸ்லிம்களுக்கு அதனை சேகரிக்கும் நாளாகும். இந்த நாளில் பல பெரிய நிகழ்வுகள் நடந்தன.

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்

இந்த நாளை வணங்குவது, அதை மதிப்பது மற்றும் இன்றுவரை பிரத்தியேகமான வழிபாட்டுச் செயல்களுக்காக அந்த நாளை தனிமைப்படுத்துவது என அனைத்தும் நபிகளின் போதனையாகும். நபி வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் இரண்டு குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதினார்.அதில் அந்த நாளில் என்ன நடந்தது அல்லது அன்றைய தினம் நடக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் ஆதாமின் படைப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் மனிதகுலத்தின் பண்புகளைப் பற்றி பேசுகிறார்கள், இவை அனைத்தும் நடந்தது அல்லது நடக்கப்போவது ஒரு வெள்ளிக்கிழமையில்தான்.

MOST READ: இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மன்னரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது... அவர் யார் தெரியுமா?

நபிகளின் பரிந்துரை

நபிகளின் பரிந்துரை

வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு முந்தைய நாள் இரவு தன் மீது அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தை அனுப்புமாறு அவர் முஸ்தஹாப் செய்கிறார். ஏனெனில் அவர் " வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு முந்தைய இரவு தனக்கு நிறைய ஆசீர்வாதங்களை அனுப்புங்கள் " என்று கூறியுள்ளார்.

வாரத்தின் திருவிழா

வாரத்தின் திருவிழா

அல்லாஹ்வின் தூதர் கூறுகையில், வெள்ளிக்கிழமை அல்லாஹ்-க்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் முக்கியமான நாளாகும். மேலும் இது அல்-ஆதா (தியாக விருந்து) மற்றும் அல்-பித்ர் நாள் (நோன்பை முறிக்கும் விருந்து) ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் என்று கூறியுள்ளார். இந்த நாளுக்கு சில சிறப்பு பண்புகள் உள்ளது. அவை என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்

இந்த நாளில்தான் அல்லாஹ் ஆதாமை படைத்ததாக கூறப்படுகிறது, இந்த நாளில்தான் ஆதாம் பூமிக்கு வந்தார், இந்த நாளில்தான் அல்லாஹ் ஆதாமை இறக்கச் செய்தார். இந்த நாளில் ஒரு மணி நேரம் உள்ளது, அந்த ஒரு மணி நேரத்தில் தடைசெய்யப்பட்டதைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் அல்லாஹ் அவர்களுக்கு அதனை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

MOST READ: உங்க ராசிப்படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் பெருமைவாய்ந்த குணம் என்ன தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்

பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்

சஹீஹ் அல் புகாரி கூறியது படி, " அல்லாஹ்வின் தூதர் கூறினார்: இந்த நாளில் தன்னால் முடிந்த வரை தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, தலைமுடியை நேர்த்தியாக வைத்துக்கொண்டு, வாசனை திரவியத்தை உபயோகித்த பின்னர் வெளியே சென்று, இரண்டு பேருக்கு நடுவில் செல்லாமல், அல்லாஹ்வை மெய்யுருக வணங்கி, பிரார்த்தனையின் பொது இமாமின் பிரசங்கத்தை கவனமாக கேட்பவர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் " என்று கூறியுள்ளார்.

பதிலளிக்கும் நேரம்

பதிலளிக்கும் நேரம்

வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் நேரம் என்ற ஒன்று உள்ளது. இந்த காலம் ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு மணி நேரத்தில் அல்லாஹ்விடம் கேட்பதை அவர் வழங்குவார் என்று நபிகள் கூறியுள்ளார். அல்லாஹ்வின் தூதர் கூறினார், " வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நீங்கள் அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவர் உங்களுக்கு தேவையானதை வழங்குவார் " என்று கூறியுள்ளார்.

MOST READ: ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அவர்களின் இந்த செயல்கள்தான் காட்டிக்கொடுக்கிறதாம் தெரியுமா?

ஏன் வெள்ளிக்கிழமை?

ஏன் வெள்ளிக்கிழமை?

ஆண்டின் அனைத்து மாதங்களிலிருந்தும் ரமலான் மற்றும் அனைத்து இரவுகளிலிருந்தும் லயலத் அல்-கத்ர் மற்றும் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்காவைத் தேர்ந்தெடுத்தது போலவே, வாரத்தின் அனைத்து நாட்களிலிருந்தும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நாள் வெள்ளிக்கிழமைதான் என்று உலகம் முழுவதும் நம்பப்படுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: islam god இஸ்லாம்
English summary

Why Do Muslims Pray On Friday?

Read to know why do muslims pray on friday
Story first published: Wednesday, November 27, 2019, 12:17 [IST]
Desktop Bottom Promotion