For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா?

இந்தியாவில் பெண்கள் அன்றாடம் அணியும் பொருட்களில் ஒன்று வளையல் ஆகும். இந்தியாவின் அனைத்து பண்டிகைகளிலும், கொண்டாடத்திலும் வளையல்கள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன.

|

இந்திய கலாச்சாரத்திற்கு என்று உலக அளவில் பெரிய பெயரும், புகழும் உள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு இவ்வளவு பெருமை இருப்பதற்கு காரணம் நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கைமுறையும்தான். எந்தவொரு கலாச்சாரத்தின் சிறப்பும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்களை சார்ந்தே உள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்திய பெண்கள் தங்களை நகைகளை கொண்டு அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Why Do Indian Women Wear Bangles

இந்தியாவில் பெண்கள் அன்றாடம் அணியும் பொருட்களில் ஒன்று வளையல் ஆகும். இந்தியாவின் அனைத்து பண்டிகைகளிலும், கொண்டாடத்திலும் வளையல்கள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. வளையல்களுக்கென்று நீண்ட வரலாறு உள்ளது. இந்த பதிவில் இந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளையல்

வளையல்

முன்பே கூறியது போல வளையல்களுக்கு என்று பெரிய வரலாறு உள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் வளையல் அணிகிறார்கள். பொதுவாக வாலாயல்கள் கண்ணாடி, சங்கு, பல்வேறு உலோகங்கள், தங்கம், தந்தம் என பொருட்களில் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரிய பஞ்சாப் வளையல்கள் தந்தத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது, பாரம்பரிய பெங்கால் வளையல்கள் சங்கு கொண்டு தயாரிக்கப்படுகிறது.

வளையல் கலாச்சாரம்

வளையல் கலாச்சாரம்

உத்திரபிரதேசத்தில் திருமணத்தின் போது பெண்கள் சிவப்பு நிற வளையலையும், சிவப்பு நிற புடவையையும் அணிவார்கள். அதேபோல மஹாராஷ்டிரா மாநிலத்தில் பச்சை நிற புடவை மற்றும் பச்சை நிற வளையலை அணிவார்கள். வளையல்கள் இந்தியாவின் பாரம்பரியத்துடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன, அவை பல பிரபலமான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு வழிவகுத்தன.

வளையலின் பயன்கள்

வளையலின் பயன்கள்

வளையல்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தங்கத்தில் வளையல் செய்து அதில் வைரங்களை பதிக்கும் வரை வந்துவிட்டாலும், தந்தம், கண்ணாடி மற்றும் சங்கில் செய்யப்படும் வளையல்கள் இன்றும் பிரபலமானவையாகத்தான் உள்ளது. குறிப்பாக கண்ணாடி வளையல்களால் உருவாகும் ஒலி எதிர்மறை ஆற்றல்களை விரட்டுகிறது என்று கூறப்படுகிறது. கண்ணாடி வளையல்களைப் பார்க்கும்போது இயற்கையாகவே மக்கள் சில நல்ல அதிர்வுகளை உணர்கிறார்கள்.

MOST READ: கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா?

பிளாஸ்டிக் வளையல்கள்

பிளாஸ்டிக் வளையல்கள்

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இப்போது அதிகளவு பிளாஸ்டிக் வளையல்கள் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வண்ணங்களிலும், வேலைப்பாடுகளுடனும் இப்போது பிளாஸ்டிக் வளையல்கள் கிடைக்கிறது. ஆனால் இந்த வளையல்கள் ஒருபோதும் கண்ணாடி வளையல்கள் தரும் உணர்வையும், அதிர்வுகளையும், மகிழ்ச்சியையும் வழங்காது. மேலும் பிளாஸ்டிக் வளையல் மூலம் உங்களுக்கு வளையல்கள் மூலம் கிடைக்கும் எந்த நன்மையும் கிடைப்பதில்லை.

வளையலின் நன்மைகள்

வளையலின் நன்மைகள்

கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிவரும் நுட்பமான சத்தங்கள் பெண்களின் உறுப்புகளுக்கு பாதுகாப்பை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஒலி பெண்களின் உடல் உடலைச் சுற்றி ஒரு பிரகாசத்தை உருவாக்குகிறது, எல்லா ஆபத்துகளிலிருந்தும் தீய மந்திரங்களிலிருந்தும் அவளைப் பாதுகாக்கிறது.

புராண குறிப்புகள்

புராண குறிப்புகள்

வளையல் பற்றிய இந்த உண்மைகள் சில இந்து வேதங்களில் மிகவும் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. வளையல்கள் ஒன்றுக்கொன்று லேசாக மோதுகையில், கிரியா சக்தி (அதிரடி அலைகள்) வெளிப்பட்டு பெண்களின் சூரிய நாடியை (சூரிய சேனல்) செயல்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது. இந்த அலைகள் பெண்களின் உடலமைப்பைச் சுற்றி பரவி, வளிமண்டலத்தின் தீய ஆற்றல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கின்றன.

MOST READ: உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா?

வளையலின் எண்ணிக்கைகள்

வளையலின் எண்ணிக்கைகள்

ஒவ்வொரு கைகளிலும் அணியும் வளையல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, குறிப்பிட்ட வகையான ஆற்றல் உருவாக்கப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது. பொதுவாக மூன்று, ஆறு, எட்டு அல்லது பன்னிரண்டு எண்ணிக்கையிலான வளையல்கள் அணிய வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது. இளம் வயது பெண்கள் குறைந்த அளவிலான மூன்று வளையல்களை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. புதிதாக திருமணமான பெண்கள் அதிகளவு வளையல்களை அணிய வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு அதிக ஆற்றலும், நேர்மறையான அதிர்வுகளும் தேவை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do Indian Women Wear Bangles

Read to know why do Indian women wear bangles.
Story first published: Thursday, September 19, 2019, 17:31 [IST]
Desktop Bottom Promotion