For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் மட்டும் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? அதற்குமுன் என்ன படம் இருந்தது?

|

நம்மை சுற்றி நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் குறித்து நாம் எப்போதும் சிந்திப்பதே இல்லை. ஒரு சில விஷயங்களை நாம் சிறுவயது முதலே பார்த்து வந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்பதை நம் ஒருமுறை கூட யோசித்து பார்த்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் நாம் தினமும் பயன்படுத்தும் பணம் பற்றியது.

நாம் நினைவு தெரிந்து நாள் முதலே நாம் உபயோகிக்கும் பணத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் முகத்தை மட்டும்தான் பார்த்து வருகிறோம். எண்ணற்ற தேசத்தலைவர்கள் நம் நாட்டில் இருந்தாலும் ஏன் மகாத்மா காந்தியின் முகம் மட்டும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது என்று எப்போதாவது சிந்தித்த இருக்கிறீர்களா? பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கூட காந்தியின் புகைப்படத்தை மாற்ற முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதிருந்து தொடங்கப்பட்டது?

எப்போதிருந்து தொடங்கப்பட்டது?

இந்திய ரிசர்வ் வங்கி 1996 ஆம் ஆண்டு காந்தி புகைப்படம் அச்சிடப்பட்ட ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளுடன் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், வங்கித் தாளில் மகாத்மா காந்தியின் படம் தோன்றுவது இது முதல் முறை அல்ல. 1969 ஆம் ஆண்டில், மகாத்மாவின் நூறாவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அவரது புகைப்படத்துடன் கூடிய 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு 1987ல் மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் 500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இறுதியாக 1996 இல், மகாத்மா காந்தி புகைப்படம் அச்சிடப்பட்ட தொடர் நோட்டுகள் வெளியிடப்பட்டது, அது அதுவரை அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாற்றியது.

காந்தியின் புகைப்படத்திற்கு முன் இருந்த சின்னங்கள்

காந்தியின் புகைப்படத்திற்கு முன் இருந்த சின்னங்கள்

மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளுக்கு முன், அசோகாவின் லயன் கேபிடல் பெரும்பாலான ரூபாய் நோட்டுகளில் ஆதிக்கம் செலுத்தியது. ஒடிசாவில் உள்ள கோனார்க் கோயில் ரூ.20, பிரகதீஸ்வர கோயில் ரூ.1,000 மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா ரூ.5,000 என வெவ்வேறு மதிப்பு நோட்டுகளில் பயன்படுத்தப்பட்ட வேறு சில படங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, ரிசர்வ் வங்கி 1938 ஆம் ஆண்டு தொடங்கி 11 ஆண்டுகளாக இந்திய நாணயத் தாள்களில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ் VI இன் உருவப்படத்திற்குப் பதிலாக தேசிய சின்னத்துடன் புதிய நோட்டுகளை வடிவமைத்தது.

MOST READ: இந்த ஊரில் பெண்கள் 2 குழந்தை பெற்ற பிறகுதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்களாம்...உலகின் மோசமான திருமண சடங்குகள்!

மகாத்மாவின் உருவப்படம் ஏன் பயன்படுத்தப்பட்டது?

மகாத்மாவின் உருவப்படம் ஏன் பயன்படுத்தப்பட்டது?

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, காந்தியின் உருவப்படத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அனைத்து சின்னங்களும் எளிதில் போலியானவை, ஏனெனில் அவை உயிரற்ற பொருட்கள். மாறாக, மனித முகத்தை நகலெடுப்பது கடினம். ஆனால், ஏன் மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வேறு எந்த தலைசிறந்த தலைவரும் இல்லையா? ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். ஏதேனும் ஒரு உருவத்தைத் தேர்ந்தெடுப்பது மற்ற சமூகங்களை ஒதுக்கிவைத்ததாக உணரவைக்கும், எனவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க, தேச தந்தையின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

உண்மையான புகைப்படம்

உண்மையான புகைப்படம்

ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் வரையப்பட்டது அல்ல. இது 1946 இல் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைசிராய் இல்லத்தில் எடுக்கப்பட்ட அசல் படத்திலிருந்து வெட்டப்பட்டது. புகைப்படத்தில் உள்ள மற்றொரு நபர் லார்ட் ஃபிரடெரிக் வில்லியம் பெதிக்-லாரன்ஸ், ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி ஆவார்.

MOST READ: அலெக்ஸாண்டரை இந்தியாவிற்குள் நுழையாமல் தடுத்து கிரேக்கத்துக்கே திருப்பி அனுப்பிய அந்த மாவீரன் யார் தெரியுமா?

நிதியமைச்சரின் பதில்

நிதியமைச்சரின் பதில்

மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டுமின்றி வேறுசில தலைவர்களின் படங்களையும் வைக்க நாடு முழுவதும் சில குரல்கள் எழுந்தன. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) குழு, வேறு எந்தத் தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் சேர்ப்பதற்கு எதிராக முடிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியை விட வேறு எந்த ஆளுமையும் நாட்டின் நெறிமுறைகளை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது" என்று முடிவெடுத்துள்ளதாக மக்களவையில் அறிவித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Do Indian Currencies Only Feature Mahatma Gandhi in Tamil

Read to know why do Indian currencies only feature Mahatma Gandhi.
Story first published: Wednesday, September 7, 2022, 11:52 [IST]
Desktop Bottom Promotion