For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காயின் தோற்றமும் அது கோவிலில் உடைக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியமும் என்ன தெரியுமா?

|

உலகில் அதிக கோவில்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இந்து மத சடங்குகளிலும், வழிபாட்டிலும் தேங்காய்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது பல மத மற்றும் சமூக அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை, இது ஒரு இந்து கோவிலில் மிகவும் பொதுவான பிரசாதங்களில் ஒன்றாகும்.

தேங்காய்க்கு பல பெயர்கள் உள்ளது, தேங்காய் சமஸ்கிருதத்தில் நரிக்கேலா என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீஃபாலா அல்லது "நல்ல பழம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாபாலா அல்லது கடவுளுக்கு வழங்கப்படும் பெரிய பழம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதற்கும், அது பிரசாதமாக வழங்கப்படுவதற்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காயின் தோற்றம்

தேங்காயின் தோற்றம்

வேதங்களில் தேங்காயைப் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. தேங்காயைப் பற்றிய குறிப்புகள் புராணங்களில் இருந்துதான் தொடங்குகிறது. உலகில் முதன் முதலாக தேங்காய் இந்தோனேசியாவில்தான் கண்டறியப்பட்டது. அங்கிருந்து முதலாம் நூற்றாண்டில் தேங்காய் இந்தியாவிற்கு வந்தது.

எப்போது பயன்படுத்தப்படுகிறது?

எப்போது பயன்படுத்தப்படுகிறது?

தேங்காய் அனைத்து புனிதமான தருணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித சுபகாரியங்களும் தேங்காய் இல்லாமல் நடைபெறுவதில்லை. பெரும்பாலும் வீடுகளின் கதவுக்கு மேல் இது தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது. பொதுவாக தேங்காய் கருவுறுதலின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தென்னை மரத்தை நட்டு வைக்க வேண்டும் அதேசமயம் தெய்வங்களுக்கு தேங்காய் படைக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்தப்படுகிறது?

எப்படி பயன்படுத்தப்படுகிறது?

திருமணங்கள், திருவிழாக்கள், புதிய வாகனம் வாங்குதல், பாலம் கட்டுவது, ஒரு வீட்டின் அடிக்கல் நாட்டுதல் போன்ற சந்தர்ப்பங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு திட்டத்திலும் எல்லாம் சரியாக நடக்கும் என்று தேங்காய் உத்தரவாதம் அளிப்பது போலாகும். தேங்காய் ஒரு நீர் நிரம்பிய பானை (கலஷா) மேல் வைத்து, மா இலைகளால் அலங்கரிக்கப்பட்டு, முக்கியமான சந்தர்ப்பங்களில் வழிபடப்படுகிறது, தவிர, மதிப்பிற்குரிய விருந்தினர்களையும் வரவேற்க பயன்படுத்தப்படுகிறது.

MOST READ: இங்க ஆணின் உள்ளாடையையும், பெண்ணின் உள்ளாடையையும் ஒண்ணா காயப்போட்ட தூக்கி உள்ள வைச்சிருவாங்களாம்...!

பிரசாதமாக தேங்காய்

பிரசாதமாக தேங்காய்

தேங்காய் இரண்டு பகுதிகளாக உடைக்கப்பட்டு கடவுளின் சிலை முன் வைக்கப்படுகிறது. பின்னர் இது பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. இது இறைவனைப் பிரியப்படுத்தவும், நம்முடைய ஆசைகளை நிறைவேற்றவும் வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவில், தென்னை மரம், வேப்பமரம் அல்லது வில்வ மரம் புனிதமாகக் கருதப்படுகிறது. தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஒரு தென்னை மரத்தை அழிப்பவர் தானே அழிந்து போவார் என்று நம்புகிறார்கள்.

ஏன் கடவுளுக்கு வழங்கப்படுகிறது?

ஏன் கடவுளுக்கு வழங்கப்படுகிறது?

எல்லா புனித சந்தர்ப்பங்களிலும் தேங்காயை கடவுளின் சிலைக்கு முன்னால் வைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அதன் அடிப்படையில் ஒரு வன்முறை நிறைந்த நோக்கம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. பண்டைய காலங்களில் கடவுளுக்கு பூஜை செய்வதற்கு முன் உயிர்பலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. இந்த செயல் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது என்பதை சமூகங்கள் உணர்ந்தபோது, மனிதனுக்கு பதிலாக ஒரு தேங்காய் மாற்றப்பட்டது.

ஏன் தேங்காய் தேர்ந்தெடுக்கப்பட்டது?

ஏன் தேங்காய் தேர்ந்தெடுக்கப்பட்டது?

விரும்பத்தகாத மற்றொரு உண்மை உங்களுக்கு காத்திருக்கிறது. தேங்காய் ஒரு மனிதனின் தலைக்கு பதிலாக வழங்கப்படுகிறது, ஏனெனில் தேங்காயின் தோற்றம் ஒரு மனிதனின் தலை போல தோற்றமளிக்கின்றன. பிற்காலத்தில், இந்த நடைமுறை பரவலாகி, இந்து கோவில் வழிபாட்டின் வழக்கமான பகுதியாக மாறியது.

MOST READ: இந்த ராசிக்காரங்க ஒரே காதலில் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்களாம்... சீக்கிரம் எஸ்கேப் ஆகிருவங்களாம்...

தேங்காயின் குறியீடு

தேங்காயின் குறியீடு

தேங்காய் உடைக்கப்படுவது, ஈகோவை உடைப்பதை குறிக்கிறது. தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் வழியில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும்.

இந்து புராணங்களில் தென்னை மரம்

இந்து புராணங்களில் தென்னை மரம்

இந்து புராணங்களின்படி, சொர்க்கத்தில் ஒரு மனிதனாக நுழைவதற்கு முயன்ற, ஆனால் கடவுளால் தூக்கி எறியப்பட்ட சத்யவ்ரதா மன்னரை முடுக்கிவிட விஸ்வாமித்திர முனிவரால் தேங்காய் பழம் உருவாக்கப்பட்டது. சத்யவ்ரதா சூரிய வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர். அவர் ஒரு பக்தியுள்ள ஆட்சியாளர் மற்றும் பெரிதும் மதவாதியாக இருந்தார். சத்யவ்ரதாவுக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. அவர் தனது உடலை அப்படியே சொர்கலோகத்திற்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.

MOST READ: கரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்... சர்க்கரையின் விசித்திரமான பலன்கள்...!

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

தென்னை மரத்தின் ஒரு அற்புதமான விஷயமான என்னவெனில், தென்னை மரத்தின் வேர்கள் கடற்கரையில் இருக்கும் உப்பு நீரை உறிஞ்சினாலும் அதன் தண்ணீர் இனிமையான நீராக மாற்றுகிறது. இது ஒருவரின் தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Do Hindus Break Coconut In the Temple?

Read to know why do hindus break coconut in the Temple
Story first published: Wednesday, March 4, 2020, 12:20 [IST]