For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொடூரமாக ஒரே இடத்தில் கொன்ற தென்னிந்திய ஆட்சியாளர் யார் தெரியுமா?

|

எந்தவொரு நாட்டின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டால், அரண்கள் மற்றும் போர்க்களங்களுக்கு அப்பால் மகிழ்ச்சியான சம்பவங்களை விட சோகமான மற்றும் வினோதமான சம்பவங்கள் உள்ளன. அவர்களில் பலர் கடந்த காலத்தின் துயரங்களுக்கு கீழே மறைந்து கிடக்கிறார்கள். இரத்தத்தில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கக்கூடியவை.

கடந்த காலத்தில், இந்தியா பல்வேறு நம்பிக்கையுள்ள பல்வேறு ஆட்சியாளர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்ததால், இதுபோன்ற விசித்திரமான மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. கடந்த காலங்களில் கிட்டதட்ட அனைத்து ஆண்களுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் அதேசமயம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு மூடத்தனத்தாலும் தன்னுடைய 63 மனைவிகளை இரக்கமில்லாமல் கொன்ற ஒரு ஆட்சியாளரைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்சல் கான்

அப்சல் கான்

ஒரு துணிச்சலான முஸ்லீம் இராணுவத் தலைவர் தனது 63 மனைவிகளை கல்லறைக்கு அனுப்பியதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், இதுபோன்ற சோகமான விசித்திர நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் நகரில் நடந்தது. பீஜப்பூரில் இருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் 'சாத்கபார்' எனும் இந்த விசித்திரமான அமைதியான இடம் முட்டாள்தனத்தால் தன்னுடைய 63 மனைவிகளை இரக்கமின்றி கொன்ற ஒரு அப்சல் கானின் கொடூர எண்ணத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.

சத்ரபதி சிவாஜியுடனான போர்

சத்ரபதி சிவாஜியுடனான போர்

17 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மராட்டிய வீரரும் ஆட்சியாளருமான சத்ரபதி சிவாஜி, பிஜப்பூர் சுல்தானுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். சிவாஜி இரண்டாம் ஆதில் ஷாவுக்கு எதிராகப் போர் தொடுத்தபோது, அவரை எதிர்க்கும் பொறுப்பு அவரது இராணுவத் தலைவர் அப்சல் கானிடம் வந்தது. அவரது தனித்துவமான திறமைகள் மற்றும் கட்டளையிடும் திறன் மற்றும் போர் உத்திகள் அவரது புகழுக்குகு வழிவகுத்தது மற்றும்உயர்ந்த இடத்தை அடைய செய்தது. வைரங்கள் பதிக்கப்பட்ட '' '' அடிலி '' என்ற புகழ்பெற்ற வாளை அவருக்கு வழங்கியதாக வரலாறு கூறுகின்து. அவருக்கு தல்-கஜ் என்ற புகழ்பெற்ற யானைப்படை இருந்தது மற்றும் 10,000 வீரர்களின் தனிப்பட்ட படைக்கு தலைமை தாங்கினார்.

ஜோதிடத்தால் ஏற்பட்ட விபரீத முடிவு

ஜோதிடத்தால் ஏற்பட்ட விபரீத முடிவு

போருக்கு முன்பு ஜோதிடர்களுடன் கலந்தாலோசித்தார் அப்சல் கான். இந்த முறை ஜோதிடர்கள் அவரிடம் இது ஒரு சாதகமற்ற நேரம் என்றும், அடுத்தடுத்த போரில் அவர் இறக்க நேரிடும் என்றும் கூறினார். இந்த கணிப்பினால் துயரத்தில் மூழ்கிய அவர், தனது உயிர் பிரிவதை விட ஹரேமில் உள்ள தனது 63 மனைவிகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். பொறாமை மற்றும் உடைமை உணர்வுடன் இருந்ததால், மறுமணம் அல்லது எதிரிகளின் தவறான நடத்தையைத் தவிர்ப்பதற்காக அவர் தனது மனைவிகள் அனைவரையும் கொல்ல முடிவு செய்தார். ஆனால் மராத்தியர்கள் எப்போதும் போரில் தோல்வி அடைந்தவர்களை சேர்ந்த பெண்களை மரியாதையுடன் நடத்தும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.

MOST READ: உங்க கன்னம் குண்டா அசிங்கமா இருக்கா... அப்ப அதைக் குறைக்க இந்த ஈஸியான வழிகளை பாலோ பண்ணுங்க...!

இரக்கமற்ற படுகொலை

இரக்கமற்ற படுகொலை

அப்சல் கானின் மனைவிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தப்பிக்க முயன்றவர்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்கள். அப்சல் கான் போருக்குச் செல்வதற்கு முன் அனைத்துப் பெண்களும் இந்தப் புதைகுழியில் அடைக்கப்பட்டனர். இராணுவத் தளபதியின் பைத்தியக்காரத்தனம் மற்றும் ஆவேசத்தின் காரணமாக ஹரேமில் உள்ள பெண்கள் இந்த சோகமான விதியை சந்தித்தனர்.

அப்சல் கானின் மரணம்

அப்சல் கானின் மரணம்

இவர்களின் திறந்தவெளி கல்லறைகள் பெரும்பாலும் கருங்கல்லால் ஆனவை, இந்த கற்கள் பல உடைந்து, திறந்தபடி இருக்கும். போருக்கு முன்பே அவர்களின் மரணம் நிகழ்ந்தது மற்றும் அப்சல் கான் தனது கல்லறையை இங்குள்ள கல்லறைகளுக்கு அருகில் கட்ட விரும்பினார். ஆனால், ஜோதிடர் கணித்தபடி, சிவாஜியின் லெப்டினன்ட் சாம்பாஜி காவ்ஜியால் சிவாஜியுடனான போரில் போரில் கொல்லப்பட்டார், பிரதாப்காட் போரில் அவரது இராணுவம் தோற்கடிக்கப்பட்டது.

சாத் கபாரின் துயரம்

சாத் கபாரின் துயரம்

சாத் கபாரில் உள்ள சூழல் விரும்பத்தக்கது அல்ல, மிகவும் விசித்திரமானது. இங்குள்ள அச்சுறுத்தும் மௌனத்தில், ஒரு பைத்தியக்கார மனிதனால் ஒரே இரவில் தலைவிதி மாறிய வேதனையுடன் இறந்த அப்பாவி பெண்களின் அழுகை கலந்திருக்கும். இந்த இடத்திற்கு வரும் எந்தவொரு பார்வையாளரும் இந்த இடத்தை விட்டு வெளியேறி நாகரிக உலகில் தஞ்சமடைய அவசரப்படுவார்கள்.

MOST READ: முதல் காதலை ஏன் எப்போதும் மறக்க முடிவதில்லை? அதற்கு பின் இருக்கும் உளவியல் ரகசியங்கள் என்ன தெரியுமா?

சுற்றுலா பயணிகளின் தயக்கம்

சுற்றுலா பயணிகளின் தயக்கம்

இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த முட்டாள் இராணுவத் தளபதியின் மனைவிகளின் கல்லறைகளைத் தவிர்க்கின்றனர், ஏனெனில் அவர்களின் சோகமான முடிவைக் காண யாரும் விரும்புவதில்லை. நகர்ப்புறத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கல்லறைகள் பராமரிப்பின்றி செடிகள், காட்டு புதர்களின் நடுவில் இருக்கின்றன. விஷப்பாம்புகள் நிறைந்த இந்த பகுதி ஒரு அடர்ந்த வனம் போல காட்சியளிக்கிறது. இந்த இடத்திற்கு வந்த மக்கள் கூறுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல தயங்குவதாக கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Did Afzal Khan Kill all of His Wives?

Read to know why did General Afzal Khan kill all of his wives.
Story first published: Monday, August 30, 2021, 18:30 [IST]