Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இந்த 5 ராசிக்காரங்க உங்களை முதுகில் குத்த காத்திருக்கும் போலி நண்பர்களாக இருப்பார்களாம்... ஜாக்கிரதை!
நட்பு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு முக்கியமான உறவாகும். நல்ல நண்பர்கள் என்பது கடவுள் கொடுக்கும் வரம் போன்றது.
நட்பு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு முக்கியமான உறவாகும். நல்ல நண்பர்கள் என்பது கடவுள் கொடுக்கும் வரம் போன்றது. ஆனால் அனைத்து நண்பர்களும் நமக்கு நல்ல நண்பர்களா என்றால் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் நிச்சயம் இல்லை என்பதுதான். சில நேரங்களில் உங்கள் நண்பர் உண்மையானவரா அல்லது முற்றிலும் போலியானவரா என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.

நம்ப முடியாத, போலி நண்பர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள், ஆனால் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் முதுகுக்குப் பின்னால், உங்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள். அத்தகைய முதுகில் குத்துபவர்களிடமிருந்து விலகி இருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள், ஏனெனில் அத்தகையவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஜோதிட அறிகுறிகள் ஒருவரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். எனவே ஜோதிட சாஸ்திரத்தின் படி, பார்ப்பதற்கு நம்புவது போல தோற்றமளிக்கும் ஆனால் உண்மையில் நம்பவே கூடாத ராசிகள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
உங்களின் விசுவாசமான மற்றும் நல்ல நண்பர் என்று கூறிக்கொண்டு இருக்கும் மேஷ ராசிக்காரர்கள், உங்களுக்கு முதலில் துரோகம் செய்ய வாய்ப்புகள் அதிகம். அவர்களின் நடவடிக்கைகள் சில நேரங்களில் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கும். நீங்கள் அவர்களுக்கு பயனளிக்க மாட்டீர்கள் என்று அவர்கள் நினைத்தால், உங்களுடன் பழகுவதற்கு நிமிடங்களை வீணடிக்க மாட்டார்கள். கூடிய விரைவில் அவர்கள் வேறொரு நண்பரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மிதுனம்
அவர்கள் பச்சோந்திகளைப் போல அடிக்கடி தங்கள் முகங்களை மாற்றுகிறார்கள். அவர்கள் ஒரு கணம் உங்கள் நண்பராகத் தோன்றலாம், அடுத்த கணம் உங்களை வெறுக்கலாம் அல்லது அடுத்த நாளே மீண்டும் உங்கள் நண்பராக வரலாம். அவர்கள் எப்போதும் இரு முகம் கொண்டவர்கள். அவர்கள் உங்களுடன் உடன்படலாம், ஆனால் வேறு யாராவது உங்களை உங்கள் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசினால், அவர்கள் உண்மையில் அவர்களுடனும் உடன்படுவார்கள்.

விருச்சிகம்
அவர்கள் மற்ற அனைத்து ராசிகளை விட மிகவும் கணிக்க முடியாதவர்கள். வாக்குவாதம் அல்லது தவறான புரிதல் இருந்தால், அவர்கள் உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் உங்களுடன் உள்ள உறவைத் துண்டித்துவிட்டு, உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்புவார்கள். அவர்கள் உங்களின் நட்பை முறித்துக் கொண்டதை சொல்லும் வழி இதுதான். மற்ற சமயங்களில், அவர்கள் உங்கள் முதுகில் குத்துவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கலாம், ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

சிம்மம்
அவர்கள் பெரும் சந்தர்ப்பவாதிகள். நல்ல வாய்ப்பு வரும்போது, தங்கள் நண்பர்களைக் கூட காலை வாரிவிடுவார்கள். அவர்கள் அதைச் செய்யத் தயங்குவதில்லை, மேலும் ஒருவரின் வாய்ப்பைத் திருடுவதற்கும் ஆளாகிறார்கள். அவர்கள் நிலையற்ற மனம் கொண்டவர்கள் மற்றும் எளிதில் முடிவில் இருந்து பின்வாங்குபவர்களாக இருப்பார்கள்.

மீனம்
அவர்கள் முதலில் ஒரு அற்புதமான நண்பர் போல் தோன்றலாம். இருப்பினும், அவர்கள் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே உங்கள் முதுகில் குத்தலாம். அவர்கள் உங்களை அவர்களின் தற்காலிக நண்பராக மாற்றிக்கொள்ளலாம், அதாவது வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் அதிக பலனளிக்கக் கூடிய வேறொருவருடன் இணைந்து விடுவார்கள். அதுவரை, அவர்கள் உங்களுடன் மட்டுமே இருப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையிலிருந்தும் தப்பிக்க அவர்கள் எளிதாக பொய் சொல்வார்கள்.



Click it and Unblock the Notifications