Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
உங்க ராசியை சொல்லுங்க... 2021-இல் உங்களுக்கு எந்த மாதம் சவாலான மாதமா இருக்கும்-ன்னு சொல்றோம்...
2021 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதை விட, எந்த மாதம் சவால் நிறைந்த மாதமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால், அந்த மாதத்தில் உஷாராக இருக்கலாம் அல்லவா?
2020 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். நிச்சயம் ஒவ்வொருவருக்கும் வரவிருக்கும் புதிய ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். பொதுவாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. நாம் என்ன தான் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும், நிச்சயம் வாழ்வில் ஒரு கட்டத்தில் கஷ்டத்தை அனுபவித்தே தீருவோம்.

ஆனால் வேத ஜோதிடத்தின் படி, ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரின் ராசியைக் கொண்டு கணிக்க முடியும். அப்படியிருக்க 2021 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதை விட, எந்த மாதம் சவால் நிறைந்த மாதமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால், அந்த மாதத்தில் உஷாராக இருக்கலாம் அல்லவா? எனவே 2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை கீழே காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஜூன் மாதம் தங்களை கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதம் உங்களுக்கு சவாலான மாதமாக இருக்கும். எளிமையாக கூற வேண்டுமானால், டென்சன் அதிகரிக்கும் மற்றும் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் துரதிர்ஷ்டவசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் கடுமையாக போராடுவீர்கள். குறிப்பாக தொழில் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது உலகமே உங்களுக்கு எதிராக இருப்பதைப் போல உணர்வீர்கள். இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் கஷ்டத்தை அனுபவிப்பீர்கள்.

கடகம்
எந்த ஒரு பிரச்சனைகளையும் பேசுவதன் மூலமே தீர்க்க முடியும். ஆனால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு சவால் நிறைந்த கடினமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் பல தவறான புரிதல்களால் கஷ்டப்படுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவாலான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் பொறுமை சோதிக்கப்படும். இந்த மாதத்தில் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையுடன் இருக்க முயற்சி செய்தால், இந்த காலமும் கடந்து போகும்.

கன்னி
தீட்டிய திட்டம் நடைபெறாமல் போகும் போது, நிச்சயம் அது வெறுப்பாக இருக்கும். மே மாதத்தில் கன்னி ராசிக்காரர்களின் திட்டம் கிட்டத்தட்ட எதுவும் வெற்றிகரமாக நடக்காது. எனவே இந்த மாதத்தில் எந்த திட்டத்தையும் போடாதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பேரழிவைத் தரும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளால், மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் இந்த மாதத்தில் நீங்கள் நிதி சிக்கல்களில் சிக்கக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் தொந்தரவு நிறைந்த மாதமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் உங்கள் உறவு பதற்றம் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதம் முரண்பாடு நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் இந்த ராசிக்காரர்களை சிக்கலான சூழ்நிலையில் தள்ளும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சவால் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் செலவுகள் உங்கள் கையை மீறிப்போகும். இதனால் நீங்கள் இந்த மாதத்தில் பணப் பிரச்சனையை சந்திப்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்கினாலும், டிசம்பர் மாதம் சிக்கலான மாதமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையை நேர்த்தியாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் வீழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் தடுமாறுவதோடு, இம்மாதத்தில் மறதியும் அதிகமாக இருக்கும். என்ன தான் நேர்மறையாக நீங்கள் இருந்தாலும், திடீரென்று உங்களை மறந்து தொலைந்து போவீர்கள்.



Click it and Unblock the Notifications
