Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள் அதிர்ஷ்டத்தின் உருவமாம்..மிஸ் பண்ணிடாதீங்க
சாமுத்ரிகா சாஸ்திரத்தில் ஒரு பெண் அதிர்ஷ்டசாலியா, இல்லையா என்பதை வரையறுக்கும் சில மதிப்பெண்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளன.
அனைத்து பெண்களுமே அவர்களை பிடித்தவர்களுக்கு அன்பானவர்களாகவும், அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும்தான் தெரிவார்கள். இந்தியாவில் பெண்கள் அன்பு, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகவே கருதப்படுகிறார்கள். பெண்களை ஒரு உயிராய் மதிப்பதைக் காட்டிலும் அவர்களை கௌரவத்தின் அடையாளமாக நினைக்கும் மடைமை இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பிறந்த வீடாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி பெண்கள் லட்சுமியின் அடையாளமாக கருதப்படுகின்றனர். பெண்களின் அதிர்ஷ்டம் என்பது சிலசமயம் அவர்களின் சாமுத்ரிகா சாஸ்திரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. சாமுத்ரிகா சாஸ்திரத்தில் ஒரு பெண் அதிர்ஷ்டசாலியா, இல்லையா என்பதை வரையறுக்கும் சில மதிப்பெண்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளன. உடலின் சில உடல் பாகங்கள் அல்லது அடையாளங்கள் ஒரு பெண்ணைப் பற்றி நிறைய கூறுகிறது.

கால்களின் உள்ளங்கால்கள்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, கால்களின் காலடியில் ஒரு முக்கோணக் குறி வைத்திருக்கும் பெண்கள் புத்திசாலித்தனமாகவும் புரிந்துணர்வு கொண்டவராகவும் கருதப்படுகிறார்கள். அவர்களின் புத்திக்கூர்மை மற்றும் புரிந்துணர்வு மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்கும். இவர்கள் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.

தொப்புள்
தொப்புளுக்கு அருகில் அல்லது கீழே ஒரு பெண்ணுக்கு மச்சம் அல்லது மரு இருந்தால் அந்த பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவராக இருப்பார். அதிர்ஷ்டம் நிறைந்த இந்த பெண்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

கால் விரல்கள்
நீளமான விரல்களை கொண்ட பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் அதிக கஷ்டப்படுவார்கள். ஆனால் அந்த பெண்ணின் கட்டைவிரல் அகலமாகவும், வட்டமாகவும், சிவப்பு நிறமாகவும் இருந்தால், அவர்கள் ஒரு அதிர்ஷ்டசாலி பெண் என்று கருதப்படுகிறார்கள்.

சுழல் முத்திரைகள்
கால் விரல்களுக்கு அடியில் ஒரு சுழல் முத்திரை இருந்தால் அந்த பெண்கள் அதிக அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் அதிகம் போராட வேண்டியதில்லை. கடவுளின் அருள இத்தகைய பெண்களிடம் எப்போதும் இருக்கும். கால்களில் சங்கு, தாமரை போன்ற சின்னங்கள் இருந்தால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

மூக்கில் மச்சம்
ஒரு பெண்ணுக்கு மூக்கின் மறுபுறம் மோல் அல்லது மருக்கள் இருந்தால், அந்தப் பெண் ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை வைத்திருப்பார்கள். இது எப்போதும் வளமானதாகவும், செல்வந்தராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாக்கு
மென்மையான, இளஞ்சிவப்பு நாக்கு கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏராளமான மகிழ்ச்சியைக் கொண்டுள்ளனர், அதே மகிழ்ச்சியை உங்கள் குடும்பத்திற்கும் வழங்குவார்கள்.

அழகிய கண்கள்
அழகிய கண்களை கொண்ட பெண்கள் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்தவர்கள். கண்ணின் மூலையில் சிவப்பு பகுதி இருந்தால், அந்த பெண் அதிக அதிர்ஷ்டசாலி பெண் என்பதற்கான அறிகுறியாகும். அத்தகைய பெண்ணை நீங்கள் கண்டால் அவர்களை ஒருபோதும் தவற விட்டுவிடாதீர்கள்.

இளஞ்சிவப்பு மென்மையான கால்
மென்மையான, இளஞ்சிவப்பு மற்றும் முழுமையாக வளர்ந்த கால்களைக் கொண்ட பெண்கள் ஆசீர்வதிக்கப்ட்ட பெண்கள். இவர்கள் தங்கள் காதலன் அல்லது கணவனை மிகுந்த மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்கள் உடல்ரீதியான அன்பு மற்றும் நெருக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் கூட்டாளருடன் அதிக நெருக்கத்தை பேணுகிறார்கள்.

கால் விரலின் நீளம்
அனைத்து விரல்களும் ஒரே நீளத்தில் இருக்கும் பெண்கள் முழுவாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

இடது கன்னத்தில் மச்சம்
இடது கன்னத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் உணவை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள், இவர்கள் அனைத்து வகையான உணவுகளையும் இவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதேசமயம் இவர்கள் சமையற்கலையில் சிறந்து விளங்குவார்கள், இவர்களின் சமையல் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

காலின் நடுவிரல்
பெண்ணுடைய காலின் நடுவிரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால் அது துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படும். இந்த வகை பெண்களை திருமணம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. அதேபோல அழகிய வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் கால் நகங்கள் இருக்கும் பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், நல்ல குணம் உடையவர்களாகவும் கருதப்படுகிறார்கள். விரல்களுக்கு இடையில் இடைவெளியே இல்லாமல் இருந்தால் அவர்கள் எப்போதும் பணரீதியான பிரச்சினைகளை சந்திக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications